“இயற்கை வழங்கும் நீரை பகிர்ந்து தா” என்றது குற்றமா? தமிழன் செய்த தவறு என்ன? – செந்தமிழினி பிரபாகரன, கனடா

"இயற்கை வழங்கும் நீரை பகிர்ந்து தா" என்றது குற்றமா? தமிழன் செய்த தவறு என்ன? - செந்தமிழினி பிரபாகரன, கனடா

“இயற்கை வழங்கும் நீரை பகிர்ந்து தா” என்றது குற்றமா? தமிழன் செய்த தவறு என்ன? – செந்தமிழினி பிரபாகரன, கனடா

உலகில் நதிகளை பல நாடுகளே பகிர்கின்றன. நைல் நதியை மூன்று நாடுகள் பகிர்கின்றன. ஒரு நாட்டிற்குள் இரு மாநிலங்கள் பகிர்வதில் என்ன குற்றம் கண்டார்கள்?

“வேண்டுமானால் சிறு நீர் தருகிறோம்” என்றார்கள்…கர்நாடக மக்கள்

“என்ன மயிருக்கு…? ” என கர்நாடக நடிகை கேட்டார்…

“கொடுக்க மாட்டோம்” என்றார்கள் பி. ஜெ. பி. உள்ளிட்ட கர்நாடக கட்சிகள்.

தமிழர்கள் உடமைகளை அடித்து உடைத்தார்கள்.

தமிழ் நாளிதழை எரித்தார்கள்.

தமிழ் தொலைக்காட்சியை தடை செய்தார்கள்

தமிழர்களுக்கு அப்பொழுதும் உணர்வு பொங்கி எழவில்லை….

முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் அழிக்கப்பட்ட பொழுதும் எதையும் செய்ய முடியாத நிலையில் தானே தமிழக உறவுகள் இருந்தார்கள்?

இன்றும் அமைதி காக்கிறார்கள்.

இப்போ ஆட்டை கடித்து மாட்டை கடித்து தமிழன் மீதே கை வைத்து விட்டார்கள். இதற்கு பின்பெனும் பொங்கி எழுவார்களா தமிழர்கள்?

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் செகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதியார்.

“தனி ஒரு தமிழனுக்கு அடி விழுந்தால் பொங்கி எழுந்து போராட வேண்டாமா தமிழினம்?”

‘இந்தியாவுக்குள் நடக்கும் நதி நீர் சிக்கலில் தலையிட மாட்டேன்’ என சொல்லும் மோடிக்கு கடல் கடந்து இலங்கைக்குள் ஈழத்து சிக்கலில் தலையிட என்ன அருகதை உள்ளது?

ஆயுதமும் ஆலோசனையும் ஆக்கிரமிப்புமாக இந்தியா இலங்கைக்குள் கூத்தாடலாம்…தமிழகத்தை நீர் வழங்கி/நதி நீர் இணைத்து காக்க கூடாதா?

தமிழீழத்தில் தமிழினத்தை அழித்த இந்தியம் இன்று தமிழகத்தில் தமிழர்களை அழிக்க கங்கணம் கட்டி இருக்கின்றதா?

தமிழக மீனவர்களை இலங்கை படையினர் கொன்றால் தட்டி கேட்பதில்லை.

இன்று கர்நாடகாவில் தமிழனை கர்நாடக மக்கள் அடித்தால் தட்டிக் கேட்கவில்லை.

எனின் இந்தியத்தின் கீழ் தமிழகம் எதற்கு இருக்க வேண்டும்?

பல் தேசிய இனங்கள் இந்தியத்திற்குள் அடிமைகளாக இருக்கும் அவலம் அறியாமல் தமக்குள் மோதுவதை இந்தியா பார்த்து இரசிக்கின்றது.

கங்கை நதியை காவிரி நதியோடு இணைக்கும் திட்டம் இயலாத திட்டம் அல்ல. இந்தியா வேண்டுமென்றே முயலாத திட்டம்.

இருந்து பாருங்கள் ஒரு கர்நாடகாக்காரரை ஒரு தமிழன் அடித்தால் அன்று காஸ்மீரில் நின்ற இராணுவம் தமிழ் நாட்டில் குவிக்கப்படும்.

இந்தியாவுக்கு தமிழன் அடிமையாக இருக்க வேண்டும். அந்த கனவு அயல் மாநிலங்களூடாகவேனும் நடக்க வேண்டும்.

தமிழர்கள் தான் இனி முடிவெடுக்க வேண்டும்.. தாம் யாருக்கும் அடிமையில்லா தமிழினமாக இருக்க வேண்டுமா இல்லை இந்தியத்தின் அடிமைகளாக இப்படியே காலம் முழுவதும் சுரண்டப்பட்டும் கொல்லப்பட்டும் வதைக்கப்பட்டும் சாக வேண்டுமா? இழிவு படுத்தப்பட வேண்டுமா என்று…

ஒடுக்குமுறைகள் போராட வைக்கும்.. இன்று இந்த தமிழனுக்கு விழுந்த அடி ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் விழுந்த அடி என என்று தமிழன் உணர்கின்றானோ அன்று தான் அவனுக்கு மீட்சி.

நமக்கென்ன.. நாடு எக்கேடும் கெட்டால் என நினைப்பவர்கள் வீட்டு வாசலில் நாளை இந்த இழிவு வந்து கதவு தட்டுகையில் அன்று புரியும் அவர்களுக்கு தமது தவறு!

– செந்தமிழினி பிரபாகரன, கனடா

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: