இலங்கையில் குண்டுவெடிப்பு: ராணுவத்தினர் 12 பேர் உள்பட 19 பேர் காயம்!

இலங்கையில் குண்டுவெடிப்பு: ராணுவத்தினர் 12 பேர் உள்பட 19 பேர் காயம்!

இலங்கையில் குண்டுவெடிப்பு: ராணுவத்தினர் 12 பேர் உள்பட 19 பேர் காயம்!

இலங்கையில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடித்து 19 பேர் காயமடைந்தனர்.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான யாழ்ப்பாணம் மாகாணம், தியாதளவாவில் உள்ள ராணுவ தளத்தை நோக்கி நேற்று காலை 5.45 மணியளவில் பேருந்து ஒன்று சென்றது. கஹகோல்லா பகுதியில் அந்த பேருந்து வந்தபோது, அது திடீரென வெடித்து சிதறியது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


திடீரென வெடிகுண்டு வெடித்ததில் பேருந்து பலத்த சேதமடைந்தது. அதில் பயணம் செய்த 7 ராணுவ வீரர்கள், 5 விமானப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. குண்டு வெடிப்பில் பேருந்து பலத்த சேதமடைந்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

‘‘இது தீவிரவாத செயலாக இருக்க முடியாது. பேருந்தில் இருந்த வெடிப் பொருள் வெடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணைக்கு பிறகே குண்டு வெடிப்பிற்கான காரணம் தெரியும். சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்’ என்று ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: