தமிழகத்திலிருந்து இலங்கை செல்ல 700 அகதிகள் தயார்!

தமிழகத்திலிருந்து இலங்கை செல்ல 700 அகதிகள் தயார்!

தமிழகத்திலிருந்து இலங்கை செல்ல 700 அகதிகள் தயார்!

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமில் இருந்து இலங்கைக்கு செல்ல, 700 அகதிகள் தயாராக இருப்பதாக, மத்திய குழுவிடம் அகதிகள் தெரிவித்தனர்.

இலங்கையில் நடந்த போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள், ராமேஸ்வரம் அருகே மண்டபம் உள்ளிட்ட, 107 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுஉள்ளனர். இவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை வழங்குகின்றன.கடந்த, 2009க்கு பின், இலங்கையில் அமைதி திரும்பியதால், தமிழகத்தில் இருந்து, 900க்கும் மேற்பட்ட அகதிகள், விமானத்தில் இலங்கை சென்றனர்.

மண்டபம் உள்ளிட்ட சில முகாம்களில் உள்ள அகதிகள் தயங்கினர்.இவர்கள், வெளிநாட்டில் உள்ள உறவினர்கள் வழங்கிய, ‘டிவி’, பிரிஜ், வாஷிங் மிஷின் உள்ளிட்ட பொருட்களை வைத்துள்ளனர். இவற்றை, விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி இல்லாததால், இலங்கை செல்ல முடியவில்லை.

இந்நிலையில், மத்திய அகதிகள் மறுவாழ்வு இயக்குனர், பிரசந்த்ஜித், துணை செயலர், சதீஷ்குமார், அதிகாரி சீனிவாசன், தமிழக இணை இயக்குனர், தியாக ராஜன் ஆகியோர் நேற்று, மண்டபம் முகாமில் அகதிகளிடம் கருத்து கேட்டனர்.

இதில், 250க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த, 700 பேர், ‘இலங்கை செல்ல தயாராக உள்ளோம்; ஆனால், ‘டிவி’ உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல, கப்பல் போக்குவரத்து வேண்டும்’ என, வலியுறுத்தினர்.இது குறித்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பதாக, குழுவினர் தெரிவித்தனர்.

  • தினமலர்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: