இலங்கை மன்னார் மாவட்டத்தில் 38 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

இலங்கை மன்னார் மாவட்டத்தில் 38 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

இலங்கை மன்னார் மாவட்டத்தில் 38 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

இலங்கையின், மன்னார் மாவட்டத்தில், 38 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள, மன்னார் மாவட்டம், 1983 – 2009 வரை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த, 2009ல், இலங்கை ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட சண்டைக்கு பின், இந்த பகுதி, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. இந்நிலையில், மன்னார் நகர பகுதியில், புதிதாக கட்டடம் கட்டுவதற்காக, சமீபத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, அங்கு எலும்புக்கூடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கட்டட வேலை நிறுத்தப்பட்டு, தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

அந்த பகுதியில் இருந்து, 38 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த எலும்புக்கூடுகள், தற்போது மன்னார் மருத்துவமனையில் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன. இவை, இலங்கை ராணுவம் – விடுதலைப் புலிகளுக்கு இடையே நடந்த சண்டையில் கொல்லப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: