பிரான்ஸில் இருந்து தாயகம் திரும்பிய போது, கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த தந்தையும் மகளுமான அ. தியாகராஜா (வயது-52) மற்றும் தி. ஜனனி (வயது-24) ஆகிய இருவருமே இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
இவர்களுக்கு இலங்கைப் பணம் ரூ. 10,000 ஆயிரம் அபராதமும், இரண்டு நபர் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இரண்டாவது தவணைக்காக 4 -ஆம் மாதம் மீண்டும் ஆஜராகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து 25 வருடங்களுக்கு முன் தந்தையும் மகளும் பிரான்ஸ் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையம் வந்து இறங்கிய போதே கைது செய்யப்பட்டவை. பின்னர் தந்தையையும், மகளையும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை முன்னிலைப் படுத்தினர்.