இலங்கை மன்னார் மாவட்டத்தில் இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

இலங்கை மன்னார்  மாவட்டத்தில் இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

இலங்கை மன்னார் மாவட்டத்தில் இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற நிலையில் இது வரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விசேட சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சதொச விற்பனை நிலைய வளாகத்தில் இன்று 84-ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெறுகின்றது. இதன் போது, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் 84 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது இது வரை குறித்த வளாகத்தில் 175 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 169 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. ஏனைய அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளை மீட்கும் பணி இடம் பெற்று வருகின்றது. மேலும் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவை காபன் பரிசோதனைக்கு புலோரிடாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மன்னார் நீதிமன்றத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றவுடன் குறித்த மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக புலோரிடாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என விசேட சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>