ஈழம் Subscribe to ஈழம்
இலங்கை யாழ்ப்பாண கோட்டையில் ராணுவ முகாம் அமைக்க எதிர்ப்பு!
இலங்கை தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான யாழ்ப்பாண கோட்டையில் ராணுவ முகாம் அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்கு ராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வலியுறுத்தியும் யாழில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யாழ்ப்பாண கோட்டையின் தெற்குவாசல் பக்கமாக இன்று மாலை… Read more
500ஆவது நாளை எட்டிய காணாமல் போனோரைத் தேடி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்!
காணாமல் போனோரைத் தேடி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் 500ஆவது நாளை முன்னிட்டு காணாமல் போனோரின் உறவுகள் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முன்னபாக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள். தமிழர் தாயகத்தின் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில்… Read more
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த விஜயகலா மகேஸ்வரன்!
இலங்கையின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார ராஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரன் (ஆளும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்) கடந்த திங்கள்கிழமை அன்று யாழ்பாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, “2009-ம் ஆண்டுக்கு முன்னர் நாம் எப்படி இருந்தோம். நாம்… Read more
`பிரபாகரன் காலத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்’: விஜயகலாவை தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!
“பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமுடியாது” என இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திங்கள்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்றைய சூழலில்… Read more
விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயகலா மீது நடவடிக்கை!
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கையின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவருமான விஜயகலா மகேஸ்வரனை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விசாரணைகள் முடியும் வரை விலக்கி வைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால… Read more
இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு பின் முஸ்லிம் ஒருவர் மாவட்ட அரசங்க அதிபராகிறார்!
இலங்கையில் 30 வருடங்களுக்குப் பிறகு மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவரை, நியமிக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐ.எம். ஹனீபா என்பவரை, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க செவ்வாய்கிழமை அனுமதி கிடைத்துள்ளது. முஸ்லிம் சமூகத்திலிருந்து இலங்கையில் அரசாங்க அதிபர்… Read more
தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் – இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பேச்சு!
இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என இலங்கையின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தன் கருத்தை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஐனாதிபதியின் மக்கள் சேவையின் எட்டாவது தேசிய… Read more
“தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் நீதியும், நியாயமும் உள்ளது” – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன்!
“உலகின் வல்லரசு நாடுகள் நடத்திய கூட்டுச் சதியினாலேயே தமிழ் மக்களின் உரிமைக்காக நியாயமானதும், நீதியானதுமான தீவிர ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது,” என நாட்டின் எதிர் கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன்… Read more
இறுதி போரின் போது காணாமல் போன விடுதலைப்புலிகளின் 351 பேரின் பட்டியலை ITJP வெளியிட்டுள்ளது!
இறுதி போரின் போது காணாமல் போன விடுதலைப்புலிகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கமைவாக (International Truth and Justice Project) இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க,… Read more
இந்து விவகார துணை அமைச்சராக முஸ்லிம் நியமிக்கப்பட்டதால் யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்!
இலங்கையின் இந்து சமய விவகார துணை அமைச்சராக இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவரை நியமித்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் நல்லூர் கோயிலின் முன்பாக புதன்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more