சிங்கப்பூரின் அடுத்த பிரதமாக தகுதியானவன் நான் அல்ல – துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம்!

சிங்கப்பூரின் அடுத்த பிரதமாக தகுதியானவன் நான் அல்ல  - துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம்!

சிங்கப்பூரின் அடுத்த பிரதமாக தகுதியானவன் நான் அல்ல – துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம்!

சிங்கப்பூரின் அடுத்த பிரதமாக தகுதியானவன் நான் அல்ல எனத் தெரிவித்த துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூரின் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்பை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
என்னை பற்றி எனக்கு நன்கு தெரியும். எனவே பிரதமர் பதவிக்கு நான் தகுதியானவன் அல்ல. நான் கொள்கை வகுப்பதில் சிறப்பாக செயற்படுவேன்.

அத்துடன், இளைய சகாக்களுக்கும் பிரதமருக்கும் ஆலோசகனைகளை வழங்கும் தகுதி எனக்கு உண்டு. எனினும் பிரதமர் பதவியை ஏற்க எனக்கு தகுதியில்லை எனக் கருதுகிறேன்.

எனவே, அரசாங்கமானது நாட்டின் வலுவான எதிர்காலத்தை கருத்திற் கொண்டு, நீண்டகால அடிப்படையில் சிந்தித்து சிறந்த ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக யாகூ நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை நிறுவனம் நடாத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக தர்மன் சண்முகரத்னம் வர வேண்டுமென 69 வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

சிங்கப்பூரில் அடுத்த பிரதமராகும் ஈழத் தமிழர்!... சிங்கப்பூரின் துணைப் பிரதமரான தர்மன் சன்முகரத்னம்! சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ஈழத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட தமிழர் ஒருவருக்கு அதிகம்...
அழைப்பிதழ் : ‘தமிழ் உலக சந்திப்பு’ ... தமிழ் உலக சந்திப்பு > இடம் : **உமாபதி அரங்கம்**, அண்ணா சாலை, சென்னை, தமிழகம் > நேரம் : 01-10-2016 சனிக்கிழமை மாலை 5 மணி : அழைப்பிதழ் : தமிழ் ...
இந்தியா பிரதமருக்கு மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் ல... இந்தியா பிரதமருக்கு மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கொடுத்த தமிழ் அதிர்ச்சி மருத்துவம்! சிங்கப்பூரில் தமிழ் ஒரு ஆட்சி மொழியாக இருக்கிறது ...
சிங்கப்பூரின் தமிழரும், மேனாள் அதிபருமான திரு. S R... சிங்கப்பூரின் மேனாள் அதிபர் திரு. S R நாதன் காலமானார். அவருக்கு வயது 92. சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை அதனைத் உறுதி செய்துள்ளது. திர...
Tags: 
%d bloggers like this: