தமிழக அரசைக் கண்டித்து தென்கொரிய வாழ் தமிழர்கள் போராட்டம்!

தமிழக அரசைக் கண்டித்து தென்கொரிய வாழ் தமிழர்கள் போராட்டம்!

தமிழக அரசைக் கண்டித்து தென்கொரிய வாழ் தமிழர்கள் போராட்டம்!

தமிழக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து தென்கொரிய வாழ் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு நீதி வழங்க கோரியும், எட்டு வழிச் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தென்கொரிய வாழ் தமிழர்கள் போசிங்கக் பெல் என்ற இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்படனர்.

இந்த போராட்டம் தொடர்பாக தென்கொரியாவில் வாழும் தமிழர் அருண்குமார் ஐய்யப்பன் கூறுகையில், `நம் தமிழக மக்கள், தமிழக அரசாலும் மற்றும் மத்திய அரசாலும் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதை நாங்கள் கவனித்து வருகிறோம். சமீபத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் அமைதி போராட்டத்தில் கிட்டத்தட்ட 13 தமிழர்கள் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். உண்மையில் கொல்லப்பட்டவர்கள் எத்தனைப் பேர் என இன்னும் யாருக்கும் தெரியல. 99 நாள்கள் நடந்த அமைதிப் போராட்டத்தில் நூறாவது நாளன்று ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?. இறந்தவர்களுக்கு என்ன நீதி கிடைத்துள்ளது? எனப் பல கேள்விகள் இங்க உள்ள தமிழ் மக்களுக்கு இருக்கு. இச்சம்பவம் குறித்த அறிக்கை, தென்கொரியாவில் உள்ள மனித உரிமை ஆணையத்திடம் (human rights Commission) கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு நீதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டனப் போராட்டம் நடத்துறோம். இதற்கான அதிகாரபூர்வமாக அனுமதி பெற்றுள்ளோம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மக்களுக்கே நீதி கிடைக்காத நிலையில், தற்பொழுது எட்டு வழிச்சாலை என்ற பெயரில் சேலம் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும், இயற்கையைப் பாதிக்கும் வகையிலும், சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழிச்சாலையை அமைக்க, தமிழகஅரசு திட்டமிட்டு, விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறது. இன்று நாம் கண்டுகொள்ளாமல் சென்றால், நாளை நம் பிள்ளைகள் மற்றும் வருங்கால சந்ததியினர் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும். தென்கொரிய மனித உரிமை ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட ஆதரவு கடிதமும், கொரிய காவல்துறையின் ஒப்புதல் கடிதமும் விரைவில் பகிரப்படும். இந்தப் போராட்டமானது, தென்கொரியாவில் வாழும் தமிழர்கள் சார்பாக மட்டுமே நடத்தப்படுகிறது. நம் எதிர்கால நலனை எண்ணி ஒன்று கூடுவோம் தமிழர்களுக்காக என்றுமே போராடுவோம்’ என கூறி முடித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: