எழுத்தாளர் ஏ.பி.இராமன் எழு திய ‘சிங்கையில் தமிழும் தமிழரும்’ என்ற நூலும் திருமதி சௌந்தர நாயகி வைரவன் எழுதிய ‘தமிழ்ச் சமுதாயமும், நவீன சிங்கப்பூரின் உருவாக்கமும்’ என்கிற ஆங்கிலப் பதிப்பும் 69, பாலஸ்டியர் சாலையில் உள்ள சிங்கப்பூர் இந்தியர் சங்கக் கட்டடத்தின் அரங்கில் நாளை ஞாயிறு காலை 10 மணிக்கு வெளியீடு காண்கின்றன. சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் சார்பில் வெளியீடு காணும் இவ்விரு நூல்களையும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் வெளியிட்டுச் சிறப்பிக்கின்றார். இந்தி யர் சங்கத்தின் கௌரவத் தலைவர் திரு.கே. கேசவபாணி தலைமை உரை நிகழ்த்த, முனை வர் சுப. திண் ணப்பன், திரு நா.ஆண்டியப்பன், திரு மா.அன் பழகன், திரு ஜோதி மாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொலைக்காட்சித் தயாரிப்பாளர் முகம்மது அலி, சமூகப் பேச்சாளர் த.ராஜசேகரன் (தலைமை நிர் வாகி, இந்து அறக்கட்டளை வாரியம்) இணைந்து படைக்கின்றனர். திரு ஜி.டி.மணி நிகழ்ச்சியை நெறிப்படுத்துகிறார்.