மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு காலமானார்!

மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு காலமானார்!

மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு காலமானார்!

மலேசியாவின் முன்னணி எழுத்தாளரும் கல்வியாளருமான ரெ.கார்த்திகேசு இன்று அதி காலையில் கால மானார். கடந்த அரை நூற்றாண்டு காலமாக மலேசிய படைப்பிலக்கியத்தில் முத்திரை பதித்த ரெ.கார்த்திகேசு, பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

அவர் மலேசிய. வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்துள்ளார். மலேசியாவின் நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார் ரெ.கார்த்திகேசு. மிகச் சிறந்த நாவல்களை இந்த மண்ணில் வழங்கிய அவர், சிறுகதைத் துறையிலும் தனி முத்திரை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தமிழ் முரசில் மலேசிய எழுத்தாளர்  காலம் சென்ற ஐயா ரெ.கார்த்திகேசு!

இன்றைய தமிழ் முரசில் மலேசிய எழுத்தாளர் காலம் சென்ற ஐயா ரெ.கார்த்திகேசு!

அவரது இறுதிச் சடங்கு, 12ஆம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணியளவில் பிரார்த்தனைகளுடன் தொடங்கி 10.30 மணியளவில் எண்;33, ஜாலான் 5\31 ஆஃப் ஜாலான் காசிங், பெட்டாலிங் ஜெயாவிலுள்ள இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு அவரது நல்லுடல் கம்போங் துங்கு தகன மையத்தில் 11.30 மணியளவில் தகனம் செய்யப்படவுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: