இசா அமைப்பின் உலக ஒருங்கிணைப்பாளராக மலேசிய விஞ்ஞானி மகாலெட்சுமி நியமனம்!

இசா அமைப்பின் உலக ஒருங்கிணைப்பாளராக மலேசிய விஞ்ஞானி மகாலெட்சுமி நியமனம்!

இசா அமைப்பின் உலக ஒருங்கிணைப்பாளராக மலேசிய விஞ்ஞானி மகாலெட்சுமி நியமனம்!

மலேசிய இந்திய பெண்மணி ஒருவருக்கு கிடைத்த மிக உயரிய பதவியாக இது கருதப்படுகிறது. இசா அமைப்பு, விவசாய உயிரியல் தொழில் நுட்ப பயன்பாட்டினைப் பெறுவதற்கான ஓர் அனைத்துலகச் சேவை கழகமாகும்.

நவீன உயிரியல் தொழில்நுட்பப் பரிமாற்றம், விவாசாயிகள் இடையிலான வறுமை ஒழிப்பு, உயிரியல் தொழில்நுட்பம் மீதான புரிந்துணர்வை மக்களுக்கு ஏற்படுத்துதல், உயிரியல் தொழில்நுட்ப சாகுபடி மீதான புரிந்துணர்வையும் அவற்றைக் கடைபிடிக்கும் சிந்தனையும் விதைத்தல், வர்த்தகத் தடைகளை குறைத்தல், அறிவியல் சார்ந்த கொள்கைகள்0 மற்றும் விதிமுறைகளைச் சீரமைத்தல் போன்ற சேவைகளை உலக ரீதியில் இசா அமைப்பு மேற்கொண்டு வருகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


2002ஆம் ஆண்டில் இருந்து இந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வரும் மகாலெட்சுமி அர்ஜுனன், தம்முடைய அறிவியல் பணிகளுக்கு ஓர் அர்த்தத்தையும் அடையாளத்தையும் இசா அமைப்பு ஏற்படுத்தி தந்துள்ளதாக குறிப்பிட்டார். மேம்பாடு அடைந்து வரும் நாடுகளில் வாழும் மில்லியன் கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்க இந்த அமைப்பு அளப்பரிய சேவையை வழங்கி வந்துள்ளது.

விவசாயத் துறையில் சிறந்த சேவையை ஆற்றிய புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் கிளிவ் ஜேம்ஸ் மற்றும் நோபல் பரிசு வெற்றியாளரான டாக்டர் நோர்மன் பொர்லாக் ஆகியோரால் உருவாக்கப்பட்டது தான் இசா அமைப்பு.

இசாவின் அனைத்துலக ஒருங்கிணைப்பாளராக தாம் நியமிக்கப்பட்டிருப்பது குறித்துக் கருத்துரைத்த மகாலெட்சுமி, அது குறித்து தாம் பெருமை கொள்வதாக குறிப்பிட்டார்.

எனது பயணம் அவ்வளவு எளிதானது அல்ல. இசா அமைப்பில் இருந்தோர் எனக்கு ஒரு முன்னோடியாக இருந்து என்னை உருவாக்கிக் கொள்வதில் பெரிதும் உதவியுள்ளனர். தொடக்கத்தில் அதன் திட்டப் பிரிவு அதிகாரியாக நியமிக்கப் பட்டேன். அதிலிருந்து பல வழிகளில் நான் அனுபவத்தையும் ஆற்றலையும் பெற அது உதவியது என்று அவர் கூறினார்.

மலேசிய உயிரியல் தொழில்நுட்ப தகவல் மையத்தின் (MABIC) நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வரும் மகாலெட்சுமி, இந்தத் தருணத்தில் தனது வளர்ச்சிக்கு உறு துணையாக இருந்த மலேசிய சகாக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அறிவியல் ஆர்வத்திற்கு சின்ன வயதிலேயே வித்திட்டு, பெரிய கனவுகளை விதைத்துச் சென்ற காலஞ்சென்ற தன்னுடைய தந்தையை அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும் உயிரியல் நொழில்நுட்பத் துறையில் மலேசியா விரைவில் மீண்டும் புது உத்வேகத்தைப் பெறும் என்று மகாலெட்சுமி நம்பிக்கை தெரிவித்தார்.

நன்றி : vanakkammalaysia

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: