200 ஆண்டுக்கு முன்பே மலேசியாவில் தமிழ் கல்வி! – உயர் கல்வித் துறை துணை அமைச்சர் கமலநாதன் தகவல்!

200 ஆண்டுக்கு முன்பே மலேசியாவில் தமிழ் கல்வி! - உயர் கல்வித் துறை துணை அமைச்சர் கமலநாதன் தகவல்!

200 ஆண்டுக்கு முன்பே மலேசியாவில் தமிழ் கல்வி! – உயர் கல்வித் துறை துணை அமைச்சர் கமலநாதன் தகவல்!

”மலேசியாவில், தமிழ்வழி கல்வி துவங்கி, 200 ஆண்டுகள் ஆகின்றன,” என, அந்நாட்டின் உயர் கல்வித் துறை துணை அமைச்சர், கமலநாதன் தெரிவித்தார். மலேசியாவில் இந்த ஆண்டு தமிழ் கல்வி தொடங்கி 200-வது ஆண்டு கொண்டாடுகிறோம். அக்டோபர் 21-ந் தேதி 1816-ம் ஆண்டு பினாங்கு மாநிலத்தில் ஒரே ஒரு தமிழ் வகுப்பு ஆரம்பித்த சூழ்நிலையில் இன்று 2016-ம் ஆண்டு 200 ஆண்டுகாலமாக தமிழ் கல்வி சிறப்பாக மலேசியாவில் செயல்பட்டு வருகிறது.

தமிழ் கல்வி ஆரம்பமே தமிழ்நாட்டில் தான். ஆசிரியர்கள், பாடத்திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து எடுத்து சென்று மலேசியாவில் தமிழ் கல்வி தொடங்கப்பட்டது. ஆனால் இன்று மலேசியாவில் மலேசிய தமிழ் ஆசிரியர்களே சொந்தமாக பாடத்திட்டத்தை தயார்படுத்தி ஏறத்தாழ 524 தமிழ் பள்ளிக்கூடங்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் ஆசிரியர்கள், ஒரு லட்சம் மாணவர்கள் என இந்த காலகட்டத்தில் மலேசியாவில் படித்துக்கொண்டு இருக்கின்றனர்.

தமிழ்வழி கல்வி மட்டுமின்றி, தமிழ் கலை, கலாசாரம் ஆகியவற்றை மக்களுக்கு கற்றுத் தருகிறோம். இதற்கு, மலேசிய பிரதமர் உறுதுணையாக உள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில், தமிழ் வழிக் கல்வியை ஏற்படுத்த, அந்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம்.

பின்னர் அவர் கூறியதாவது : முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து டாக்டர் பாபு எனக்கு விரிவாக தெரிவித்தார். ஜெயலலிதாவின் உடல்நலம் சிறப்பாக இருக்கிறது. கூடியவிரைவில் அவர் வீடு திரும்பி சேவையை தொடங்கும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூடிய விரைவில் குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். நான் மட்டுமல்லாது மலேசியாவில் அதிகமாக வாழும் தமிழர்கள், நண்பர்கள் ஆலயத்துக்கு சென்று பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள். கூடிய விரைவில் அவர் குணம் அடைந்து தமிழக மக்களுக்கு திறமையாக தொடர்ந்து சேவை செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: