சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் : ஆலங்குடி மாணவி இரண்டு தங்கப் பதக்கம் வென்று சாதனை!

சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் : ஆலங்குடி மாணவி ஒரே மேடையில் இரண்டு தங்கப் பதக்கம் வென்று சாதனை!

சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் : ஆலங்குடி மாணவி ஒரே மேடையில் இரண்டு தங்கப் பதக்கம் வென்று சாதனை!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்த, 8-ம் வகுப்பு மாணவி, மலேஷியாவில் நடந்த, சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்று, ஒரே மேடையில் இரண்டு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கருக்காகுறிச்சியைச் சேர்ந்த சர்மிளா, 14. இவர் ஆரம்ப கல்வி முதல் தற்போது, 8-ம் வகுப்பு வரை, ஓசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அப்பள்ளியின் மூலமாக நடைபெற்ற மாவட்ட, மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் முதலிடம் பிடித்து, அப்பள்ளிக்கு பெருமை சேர்த்த இவர், சர்வதேச அளவில் மலேஷியாவில் நடந்த போட்டியில் பங்கேற்றார். கடந்த மாதம், 13ல் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேஷியா உட்பட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில், இந்தியாவிலிருந்து, 65 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது.

அதில் ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளியின், 8-ம் வகுப்பு மாணவி சர்மிளா 100 மீட்டர், 200 மீட்டருக்கான ரோலர் ஸ்கேட்டிங்கில் வெற்றி பெற்று, ஒரே மேடையில் மலேஷியாவில், இரண்டு தங்கப் பதக்கத்தை வென்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: