சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் அஞ்சல்தலை!

சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் அஞ்சல்தலை!

சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் அஞ்சல்தலை!

அஞ்சல்தலைகள் கடிதங்களை உரியவருக்குக் கொண்டுசேர்ப்பதற்கு மட்டும் பயன்படாமல் ஒரு நாட்டின் பண்பாடு, பொருளியல், அடையாளம், நல்லிணக்கம், பன்முகச் சூழல் ஆகிய கூறுகளை வெளிப்படுத்தும் காகிதச் சின்னங்களாகவும் வலம் வருகின்றன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


அவ்வாறு 1967ஆம் ஆண்டில் ‘உயிரோட்டமுள்ள சிங்கப்பூரை உருவாக்குக’ என்ற தமிழ் எழுத்துகளைக் கொண்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இதுவே சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் அஞ்சல்தலை. தேசிய தின அணிவகுப்பின் ஓர் அங்கத்தை இந்த அஞ்சல்தலை சித்திரிக்கிறது. அதுமட்டுமின்றி சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அணிவகுத்து நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்ற கருத்தையும் இந்த அஞ்சல்தலை வெளிப்படுத்துகின்றது.

இதே வாசகம் சிங்கப்பூரின் மற்ற அதிகாரத்துவ மொழிகளிலும் வெளிவந்தது. ஒவ்வொரு மொழியின் அஞ்சல்தலைக்கும் அதன் நிறம் மட்டுமே வேறுபட்டிருந்தது. நான்கு அதிகாரத்துவ மொழிகளில் வெளியீடு கண்ட முதல் அஞ்சல்தலை தொகுப்பும் இதுவே.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: