துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலகக்கோப்பை- தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை!

துப்பாக்கிச் சுடுதல்  போட்டியில் உலகக்கோப்பை- தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை!

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலகக்கோப்பை- தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 19-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இன்று நடைபெற்ற ஜூனியர் பெண்களுக்காக 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் 249.8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் 631.4 புள்ளிகள் எடுத்து அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனை என்ற சாதனையை இளவேனில் வளரிவான் படைத்தார். இது இப்போட்டியில் அவர் வெல்லும் இரண்டாவது தங்கப் பதக்கமாகும்.

முன்னதாக ஷ்ரேயா அகர்வால், ஜீனா கிட்டா ஆகியோர் உடன் இணைந்து, இளவேனில் வளரிவான் குழு பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் அர்ஜுன் பாபுடா வெண்கலப்பதக்கம் வென்றார். இளவெனில் கடந்த வாரம் நடைபெற்ற உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்பிலும் தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: