உலக அரக்கன் கொரோனாவினால், உலக நாடுகள் திடீரென எந்தவொரு நகர்வு அற்ற நிலையில் இருக்க வேண்டிய கட்டாயத்தால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இவ்வகையில் சிங்கப்பூர் குடிமக்கள் இந்தியாவில் பயணம் மேற்கண்ட போது தங்களது நாட்டிற்கு திரும்ப இயலாத நிலை உருவானது.
இந்த சிக்கலை தீர்வுக்கு கொண்டு வர, சிங்கப்பூர் வெளியூறவுத்துறை எடுத்த நடவடிக்கையால், 699 சிங்கப்பூர் குடிமக்கள் நேற்று (10-04-2020) தங்களது நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் சிங்கப்பூர் சங்கி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிங்கப்பூர் சென்ற அவர்களை சிங்கப்பூர் அரசு உடனடியாக விடுதிகளில் தனிமைப்படுத்தி கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என ஆய்வு செய்கிறது. சிங்கப்பூரில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது என்பதை அறிக.
சென்ற வாரம் இதுபோன்றே நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சென்னையிலிருந்து மலேசிய நாட்டிற்கு அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.