‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வில் தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சோழர் காலத்து சிலைகள்!

‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வில் தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சோழர் காலத்து சிலைகள்!

‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வில் தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சோழர் காலத்து சிலைகள்!

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சோழர் காலத்து ஐம்பொன் சிலைகள் அமெரிக்க கலைக்கூடத்தில் இருப்பது குறித்து ஏற்கெனவே செய்தி வெளியானது. இந்நிலையில், தமிழகத்திலிருந்து கடத்திவரப்பட்ட சோழர் காலத்து கிரானைட் நந்தி சிலை, ஐம்பொன் பத்ரகாளி சிலை, விஜயநகர பேரரசு காலத்து துவாரபாலகர் சிலைகள் ஆகியவை தங்கள் வசம் இருப்பதாக ஆஸ்திரேலிய அருங்காட்சியகமான ’நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’ (என்.ஜி.ஏ.) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


ஆஸ்திரேலிய அரசுக்கு சொந்தமான அருங்காட்சியகமான என்.ஜி.ஏ-யில் பல நாடுகளைச் சேர்ந்த சிலைகள் உள்ளிட்ட கலைப் பொருட் கள் உரிய மூலப்பத்திரங்களுடன் வைக்கப்பட்டுள்ளன. செல்வந்தர்கள் தங்களிடம் உள்ள கலைப் பொருட்களை இந்த அருங்காட்சி யகங்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதும் உண்டு.

இதுபோன்ற அருங்காட்சியகங்களுக்கு சில நேரங்களில், வெளி நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட பழமையான கலைப்பொக்கிஷங்களும் போலி ஆவணங்கள் மூலம் விற்கப்படுவதுண்டு. தங்களிடம் உள்ள கலைப் பொருள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டது என்று தெரியவந்தால் அவற்றை கேலரியிலிருந்து உடனடியாக எடுத்துவிட்டு அதுகுறித்த அறிவிப்பை அவர்கள் வெளியிடுவது வழக்கம்.

அதன்படி, கடந்த 21-ம் தேதி என்.ஜி.ஏ. ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த துவாரபாலகர் சிலைகளும் (அன்றைய மதிப்பில் சுமார் 2.74 கோடி ரூபாய்), 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து நடன சம்பந்தர் ஐம் பொன் சிலையும் சுபாஷ் கபூரின் ‘ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட்’ கலைக்கூடத் திலிருந்து 2005-ல் விலைக்கு (அன்றைய மதிப்பில் சுமார் 40 லட்ச ரூபாய்) வாங்கப்பட்டது. இதே போல் 2009-ல், 11-12 நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த சோழர் காலத்து கிரானைட் நந்தி சிலையும், 2006-ல் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து பத்ரகாளி சிலையும் நியூயார்க்கைச் சேர்ந்த கால்டன் ரோச்செல் என்பவரிடம் இருந்து விலைக்கு வாங்கப்பட்டது.

இவை அனைத்துமே தமிழகத் திலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டதாக தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு (சி.ஐ.டி) பிரிவு காவல்துறையால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த சிலைகளுக்கான மூலப்பத்திரங்களை சரிபார்ப்பது குறித்து இந்திய தூதரகத்துடன் என்.ஜி.ஏ. தொடர்ந்து பேசி வருகிறது.

இதுகுறித்து ’இந்தியா ப்ரைடு புரா ஜெக்ட்’ அமைப்பின் எஸ்.விஜய் குமார், “ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள சுபாஷ் கபூர் மற்றும் அவரது கூட்டாளிகளிடமிருந்து துவார பாலகர்கள், நடன சம்பந்தர் சிலைகள் தொடர்பான படங்களை காவல்துறை கைப்பற்றியுள்ளனர். இந்தப் படங்களை நாங்கள் மூன்று வருடங்களுக்கு முன்பே காவல்துறைக்கு கொடுத்துவிட்டோம். இருப்பினும் இப்போது தான், சிலைகள் தமிழகத்திலிருந்து கடத்தப்பட்டதை உறுதிசெய்துள்ளனர். பத்ரகாளி, நந்தி சிலைகளுக்கு என்ன ஆதாரம் கிடைத்திருக்கிறது என்று தெரியவில்லை.

நியூயார்க்கில் டோரிஸ் வியன்னரின் வியன்னர் கேலரி, சுபாஷ் கபூரின் ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட், அவரது தம்பியின் கபூர்ஸ் கேலரி, இவற்றுடன் தற்போது, கால்டன் ரோச்செல்லின் ‘கால்டன் ரோச்செல் ஏசியன் ஆர்ட் கேலரி’யும் இந்திய சிலைகளை கடத்தி விற்கும் வேலையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோஸ்லின் பேக்கர் என்ற பெண் தான் கல்நந்தி சிலையை ரோச்செல் கேலரியிலிருந்து விலைக்கு வாங்கி அதை என்.ஜி.ஏ-வுக்கு அன்பளிப்பாக தந்திருக்கிறார். ரோச்செல் கேலரியில் தமிழகத்துக்குச் சொந்தமான பழமையான சிலைகள் இன்னும் இருக்கின்றன. இதுகுறித்து அமெரிக்க காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்திய அரசும் இதுகுறித்து விரைவான விசாரணை நடத்தி உரிய அழுத்தம் கொடுத்து அவற்றையும் மீட்டு வரவேண்டும்’’.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: