மகாகவி பாரதியார் விழாவை சிறப்பாக கொண்டாடிய சிங்கப்பூர் தமிழ் அமைப்பு!

மகாகவி பாரதியார் விழாவை சிறப்பாக கொண்டாடிய சிங்கப்பூர் தமிழ் அமைப்பு!

மகாகவி பாரதியார் விழாவை சிறப்பாக கொண்டாடிய சிங்கப்பூர் தமிழ் அமைப்பு!

சிங்கப்பூர் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் மகாகவி பாரதியார் விழாவை உமறுப் புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் கோலாகலமாக நடத்தியது.

தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை செல்வி ஸ்வப்னா ஆனந்த் பாட, விழா தொடங்கியது. புக்கிட் பாத்தோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே. முரளிதரன் பிள்ளை அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், பாரதியார் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் குழந்தைகளுக்கும் மனைவிக்கும் சமுதாயத்துக்கும் பாடிய பாடல்களைக் குறிப்பிட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கி அசத்தினார். பின்னர் புரவலர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தமிழக ஆவணப் படத் தயாரிப்பாளர், இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரையில் பல புதிய செய்திகளைக் குறிப்பிட்டதோடு பெண்பாற் புலவர்களும் பாடாத பெண் விடுதலையை முதலில் பாடியவர் பாரதியார் என்றும் விதி விலக்குகளின் தொகுப்பு அவரென்றும் உணர்வு பொங்கக் குறிப்பிட்டதோடு “சந்திரிகை” எனும் நாவலை உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து 50 பக்கம் மட்டும் எழுதிய நிலையில் காலன் கவியரசரைக் காவு கொண்டு விட்டான் எனக் கூறும்போது அரங்கமே சோகமயமாயிற்று. பாரதியாரின் தந்தையார் சின்னச்சாமி அய்யர் எட்டயபுரம் வந்ததே தாம் கண்டு பிடித்த புதிய கருவியின் மூலம் பஞ்சாலை அமைக்கத்தான் என்றும் வெள்ளைய ஏகாதிபத்தியச் சதியால் அது இயலாமற் போயிற்று என்ற புதிய செய்தியையும் தெரிவித்து வியப்பில் ஆழ்த்தினார்.

பதினேழாவது ஆண்டாகத் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத்தால் பாரதியார் விழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அமைப்பின் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தார். இலங்கை நாட்டுக்கான மொரிஷியஸ் மேனாள் தூதர் ஈஸ்வரன் சக்கர நாற்காலியில் அமர்ந்து இவ்விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பித்தார். ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சீதா லட்சுமி நன்றி நவின்றார். சந்தானம் ராம்குமார் மற்றும் அநுராதா வெங்கடேசன் நிகழ்வினை நெறிப்படுத்தினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>