இந்தியாவுக்கு வாங்க.! உங்களை வரவேற்க மக்கள் காத்திருக்கிறார்கள்: தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸை சந்தித்த பிரதமர் மோடி அழைப்பு

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்த பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சர்வதேச விவகாரங்கள், பிராந்திய வளர்ச்சிகள், சுகாதாரம், சிக்கலான தொழில்நுட்பங்கள், கல்வி ஆகியவை குறித்து இருவரும் விவாதித்ததாக வெளியுறவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வானது வரலாற்று சிறப்பு வாய்ந்தது என பாராட்டினார். உலகம் முழுவதும் பலருக்கு கமலா ஹாரிஸ் உந்து சக்தியாக திகழ்கிறார் என்றும் புகழாரம் சூட்டினார். பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தலைமையில் இந்திய, அமெரிக்க உறவு நிச்சயம் புதிய உயரத்தை அடையும் என தாம் நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், அவர் விரைவில் இந்தியாவுக்கு வர வேண்டும் எனவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், உலகம் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கியபோது, பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான மூல ஆதாரமாக இந்தியா விளங்கியதாக பாராட்டினார்.

நன்றி :தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: