வன்னி வீதி திறப்பு விழா, மார்க்கம் நகரசபை மேயராலும், 7ம் வட்டார உறுப்பினர் திரு.லோகன் கணபதி அவர்களின் முயற்சியிலும், ஏனைய உறுப்பினர்களாலும் காலை 10:00 மணியளவில் 14th Avenue வில் Middlefied Road க்கும் Markham Road க்கும் இடையில் அமைந்துள்ள வன்னி வீதி திறந்து வைக்கப்பட்டது.
“வன்னி ரோடு” என்ற பெயரினைச் சூட்டும் நிகழ்வு டெனிசன் வீதியிலுள்ள “அமடேல்” சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்கம் மேயர் திரு.பிராங்க் ஸ்காபிற்றி உரையாற்றுகையில், “கனடாவில் வன்னி என்னும் தமிழ் பெயரில் திறக்கப்படும் முதல் வீதி இதுவாகும். கனடாவுக்குப் புலம் பெயர்ந்து வந்த ஏனைய நாட்டு மக்களைப் போலவே ஸ்ரீலங்காவைச் சேர்ந்த தமிழ் மக்களாகிய நீங்களும் உங்கள் நாட்டை விட்டுப் பிரிய மனமில்லாமலே கனடாவுக்குப் புலம் பெயர்ந்து வந்தீர்கள். கனடாவுக்கு வரும் மக்களை பாகுபாடு எதுவுமே இன்றி வரவேற்று, மதிப்பளிப்பதில் எமது மார்க்கம் நகர சபை முன் நிற்கின்றது. உங்கள் தாயகத்தை நினைவுறுத்தும் வகையில் 14வது அவெனியூவிலுள்ள வீதிக்கு வன்னி ரோடு என்ற பெயரினைச் சூட்டுவதில் நாம் பெருமை அடைகின்றோம். நீங்கள் தினமும் 14வது அவெனியூவின் ஊடாகச் செல்லும் போது வன்னி வீதியை பார்க்க முடியும்” என்றார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
வன்னிமைகள் கொண்டு தமிழ் மண்ணை ஆண்ட மன்னன் குலசேகரம் வையிரமுத்து பண்டார வன்னியின் திருவுருவப் படமும் வன்னி நிலப்பரப்பின் வரைவும் கொண்ட பின்னணி அமைப்பில் இன்றைய திறப்பு விழா நடைபெற்றது.
திரு. லோகன் கணபதி அவர்கள் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று தற்போது மாகாண அரசின் உறுப்பினராக உள்ளார். அவர் இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ‘தமிழர்களின் வரலாறு எவ்வாறானது என எனக்கு நன்கு தெரியும். மார்க்கம் நகரில் வாழும் தமிழர்களின் மன உணர்வையே ‘வன்னி வீதி’ எடுத்தியம்புகிறது ‘ என்றார்.