கனடாவில் கொரோனாவிற்கு தமிழ் பெண் மரணம்! #Covid19

கனடா ரொறன்ரோவில் (Toronto) வாழ்ந்து வந்த புஸ்பராணி நாகராஜா (56) கொரோனா தொற்றிற்கு உயிரிழந்துள்ளார். அவர் ஈழம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் இருந்து வந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயாரான இவருக்கும் கணவர் நாகராஜாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மூச்சுத்திணறலால் இருவரும் பிரம்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் நேற்று (13.04.2020 – திங்கட்கிழமை) உயிரிழந்தார்.

இவருடைய கணவர் தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவர்களின் பிள்ளைகளுக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டு தற்போது குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

#Covid19

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: