தமிழரான கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை, அமெரிக்காவின் பொருளாதார ஆலோசகராக டிரம்ப் நியமனம்!

உலகையே இன்று சுக்கு நூறாக்கிக் கொண்டிருக்கும், கொரோனாவின் ரூத்தர தாண்டவம், உலக வல்லரசான அமெரிக்காவை தலை கீழாக புரட்டி போடுமளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. 40,000 மேற்பட்ட அமெரிக்கர்களை காவு வாங்கி, 7.5 லட்சம் பேர் அந்த நாட்டில் கொரோனா தொற்றிற்கு உறுதிப்படுத்தப்பட்டவர்களாக உள்ள சோகம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால், அமெரிக்க பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவை மீள்ளமைக்கும் பொருட்டு அமெரிக்காவின் உலக தொழிலதிபர்கள் அந்நாட்டிற்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

இணைய உலகின் முடி சூடா மன்னராக இன்று திகழும் தமிழரான கூகுள் சி.இ.ஓ (தலைவர்) சுந்தர் பிச்சை, தலைமையில் 800 மில்லியன் அமெரிக்க டாலர் (அதாவது இந்திய பணம் ரூ.61,20,00,40,000) பல வழிகளில் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக பெரிய நன்கொடையாளர்களுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கு மட்டும் கொரோனா நன்கொடையாக ரூ.5 கோடியை கூகுள் சி.இ.ஓ (தலைவர்) தமிழரான சுந்தர் பிச்சை கொடுத்தார் என்பதை நாம் மறக்கலாகாது.

இந்நிலையில்தான் அமெரிக்க அதிபரான டொனால் டிரம்ப், இந்திய – அமெரிக்க வர்த்தக தலைவர்கள் 6 பேரை கொண்ட அமெரிக்காவிற்காக பொருளாதார ஆலோசகர்கள் குழு ஒன்றை நியமித்துள்ளார். அந்த குழுவில் தமிழரான சுந்தர் பிச்சையையும் ஒரு முக்கிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட கூடிய ஒன்று. உலகத் தமிழர் பேரவை, இக்கட்டான இந்த நேரத்திலும் தமிழரான சுந்தர் பிச்சையை பாராட்டுகிறது.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com
#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: