கனடா-வில் தமிழர் பொன்னம்பலம் உத்தமலிங்கம் காலமானார்!

கிழக்கு யாழ். கோண்டாவில் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் உத்தமலிங்கம் அவர்கள் 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

மறைந்த பொன்னம்பலம் உத்தமலிங்கம், காலஞ்சென்ற பொன்னம்பலம் இரத்தினம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா சிவஞானம் தம்பதிகளின் மூத்த மருமகனும், சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், வாசுகி (கனடா), சிவசங்கர் (கனடா), காலஞ்சென்ற சசிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சர்வேந்திரன், கமலவேணி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சோமலிங்கம், கணேசலிங்கம் மற்றும் கமலாம்பிகை (கனடா), காலஞ்சென்ற சபாலிங்கம், யோகலிங்கம் (லண்டன்), ஞானாம்பிகை (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சறோஜினிதேவி, ஜெயதேவி, சோமேஸ்வரானந்தன், பவானி, ரேணுகா, பரராஜலிங்கம், புனிதவதி, காலஞ்சென்ற சுசிலாதேவி, குகநேசன், குமரேசன், மங்களேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும், அகிலன், ஆதித்தன், உஷா, அபர்ணா, பிரதாப், லக்ஸ்சனா, சன்சுதா, கஜித்தா, மஞ்சுளா, கணன், செல்வி, அருட்செல்வன், ஆனந்தசெல்வன் ஆகியோரின் பெரிய அப்பாவும், யாழினி, ஜனகன், ஜனார்த்தனன், கஜன், அஜந்தன், நிஜந்தி, சுதன், முகுந்தன், சுஜித்தன், கீர்த்திகா ஆகியோரின் பெரிய மாமாவும், சுஜித்தா, கபிலன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

மறைந்த பொன்னம்பலம் உத்தமலிங்கம் அவர்களின் இறுதி சடங்கு வரும் 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது. தொடந்து, அவரின் உடல் தகனம் செய்யப்படும்.

சமகால நிலையின் காரணமாக மறைந்த பொன்னம்பலம் உத்தமலிங்கம் இறுதி சடங்குகள் குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

(குறிப்பு : மறைந்தவரின் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, கட்டுரையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது – ஆசிரியர், 26-04-2020)

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: