தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி!

தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி!

தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி!

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்று மொழியாக ஏற்றது மிகுந்த மனவலியை தருகிறது என மாணவி வாசித்த கவிதை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

கவிதைகள் எழுதும் திறமையை ஊக்குவிக்கும் வகையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் சிறுவர், சிறுமியர்களுக்கான நிகழ்ச்சி 2011ல் இருந்து ஆண்டு தோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியில் கவிதைகளைப் பாராட்டி ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா கவுரவித்தார். அதில் எல்லோரும் தங்கள் படைப்புகளை வாசித்து கொண்டிருக்கையில், சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய ஒரு தமிழ் தம்பதியரின் மகளான மாயா ஈஸ்வரன் (17) தன் கவிதையை ஆங்கிலத்தில் வாசித்தார்.

‘‘தலைமுடியைப் போல எனது பூர்வீகமும் உதிரத் தொடங்கி விட்டது. அம்மா! எங்கே எனக்கு வழுக்கை விழுந்து விடப் போகிறதோ என அஞ்சுகிறேன்’’ என தமிழகத்தைச் சேர்ந்த மாயா ஈஸ்வரன் கவிதை வாசித்ததும், பார்வையாளர்கள் மத்தியில் ஒருவித பிரமிப்பு ஏற்பட்டது. கடைசியில், ‘‘அம்மா! நான் தமிழ் பேசி 3 ஆண்டுகள் உருண்டோடி விட்டது’’ என கனத்தக் குரலுடன் அவர் முடித்ததும், பார்வையாளர்களிடம் இருந்து எழுந்த கரவொலி அடங்க வெகுநேரமானது.

மாயா ஈசுவரன் பேச்சை 14.15 மணித்துளி தொடங்கி 17.00 மணித்துளிவரை கேட்கலாம்

இதை அவர் வாசித்து முடிப்பதற்குள் அரங்கிலிருந்த மிச்சேல் மற்றும் அனைவரும் உணர்ச்சி வசத்தில், உற்சாகத்தோடு கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். நீ கவிதையை இயற்றிய விதமும், அதை வெளிப்படுத்திய தன்மையும் சிறப்பாக இருந்தது என மிஷேல் ஒபாமாவும், மேடையில் இருந்தபடியே மாயாவின் கவிதையைப் பாராட்டும் விதமாக உரத்தக் குரல் எழுப்பினார்.

பின்னர் அவர், ‘‘மாயா, எங்கே மாயா? சிறந்த கவிதை வாசித்துள்ளாய். மேடையில் உள்ள அத்தனைப் பேரையும் கவர்ந்து விட்டாய்’’ எனப் புகழாரம் சூட்டினார்.

நிகழ்ச்சிக்குப்பின் மாயா தனது பேட்டியில், ‘‘நான் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆனால் பிறந்தது அமெரிக்காவில். எனது கலாச்சாரம், தொன்மை, பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு எண்ணற்ற கவிதை களை எழுதியிருக்கிறேன். எனது தாய்மொழியை எப்படி இழந்தேன் என்ற அனுபவத்தைத் தான் வெள்ளை மாளிகையில் கவிதையாக மொழிபெயர்த்துக் கூறினேன். தாய்மொழியை மறந்து விட்டு, பிறமொழியை மாற்றாக ஏற்றுக் கொள்வது என்பது மிகுந்த வலி நிறைந்தது’’ என்றார்.

இதேபோல் சென்னையைச் சேர்ந்த தந்தைக்கும், கேரளா வைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்த கோபால் ராமன் என்ற இந்திய வம்சாவளி மாணவரின் கவிதையும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.


Maya Eashwaran and Gopal Raman recite poem at White House, felicitated

Maya Eashwaran attracted a sizeable audience at the White House by narrating a poem that shares her experience as an immigrant and how it was painful to replace her mother tongue Tamil with English.

“I have lost more than I have ever lost in sixteen years. I have started shedding ethnicity like hair: Mother, I fear I’ll go bald,” the 17-year old concluded reading her poetry “Ma, I haven’t spoken in three years” amidst applause from the audience.

First lady Michelle Obama felicitated her and four others including another fellow Indian-American Gopal Raman with the prestigious National Student Poet in recognition of their poetry skills.

Maya even received a shout out from the First Lady in her speech.

“Maya – where’s Maya? You put it best. These are your words, I’m told: On the stage, there is no way to leave unnoticed. Did you say that?” Michele Obama asked Maya.

“My family is Tamil. I was born here. I write a lot of my poems based on my culture, my heritage,” Maya, who born in the US to her Tamil parents, told PTI after her White House event.

“The poem that I actually read at the White House linguistics is based on experience of losing my mother tongue and kind of replacing it with another, which is very painful thing to imagine to go through,” she said, adding that when she was in the middle school she started getting interested in poety.

17-year-old Gopal Raman, the other Indian-American budding poet who received national attention is a high school student and lives in Dallas.

“It (love with poetry) started in seventh grade. I had a really great English teacher. He really pushed me in writing in more creative way. I choose poetry as my avenue of writing,” he said.

“I am super honored to meet the First Lady; I also want to plan for pre-med. My dream job right now is some short of medical doctor,” he added.

Gopal’s parents – father from Chennai and mother from Kerala – moved to the US in the 1980’s and he was born here. At the event, Gopal read out the poem “This Apple”.

The other three poets honored at the White House are Stella Binion from Chicago, Joey Reisberg from Towson in Maryland and Maya Salameh from San Diego in California.

“This is the last time we’re going to have the pleasure of welcoming a class of National Student Poets to the White House, at least under this administration. So I’m feeling a little melancholy here, because this has truly been an Honor and a privilege and a joy,” Michelle said.

The First Lady recollected how it all started when they first came to White House, they wanted to use this incredible platform to inspire young people to dream really big for themselves, to think about what their lives could look like beyond what their everyday existence is like

Since its inception in 2011, the National Student Poets Program has showcased the essential role of writing and the arts in academic and personal success for audiences across the county.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: