பாராலிம்பிக்… உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார்! மாரியப்பன் காட்டில் பரிசு மழை!

பாரா ஒலிம்பிக்... உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார்! மாரியப்பன் காட்டில் பரிசு மழை!

பாரா ஒலிம்பிக்… உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார்! மாரியப்பன் காட்டில் பரிசு மழை!

பிரேசில், ரியோ நகரில் நடைபெறும் பாராலிம்பிக் (பாரா ஒலிம்பிக்) போட்டியில் இந்திய வீரர்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர். ரியோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 18ம் தேதி வரை நடைபெறும் பாராலிம்பிக்கில் 162 நாடுகள் கலந்து கொள்கின்றன. மொத்தம் 23 விளையாட்டுகளில் 528 போட்டிகள் நடத்தப்படுகின்றன. பாராலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

மாரியப்பன் தங்கவேலு மாரியப்பன் தங்கவேலு, சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றேர் தங்கவேல்- சரோஜா. செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். 21 வயதான மாரியப்பன் சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

மாற்றுத் திறனாளியான (கால்கள் ஊனம்) மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில் அவரது வலது கால் கட்டை விரலை தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து, ஊனமானார். விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்.

சாதனை நாயகன் பள்ளி பருவத்தில் உயரம் தாண்டுதலில் அசாத்தியமான எனது திறமையை அறிந்த உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், ஊக்கம் கொடுத்து பயிற்சி அளித்தார். மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாரியப்பன் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பதக்க வேட்டை 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் அதிகபட்சமாக 1.74 மீட்டர் உயரமே தாண்டினார். இந்த முறை நான் 2 மீட்டர் உயரத்தை தாண்டி உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார். சொன்னது போல அவர் தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றுள்ளதால் அவரது பயிற்சியாளரும் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாரியப்பன் காட்டில் பரிசு மழை! மாநில அரசு ரூ.2 கோடி, மத்திய அரசு ரூ.75 லட்சம்..

ரியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கம் வென்றார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக்ஸ் எனும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் உயரம் தாண்டும் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றார். இவர் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்க பதக்கத்தை வென்றார்.

இந்தியாவிற்காக முதல் தங்கப்பதக்கத்தை மாரியப்பன் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று மற்றொரு இந்திய வீரர் வருண் சிங் மூன்றாமிடம் பெற்று வெண்கல பதக்கத்தையும் தட்டி சென்றார்.

தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வென்ற சேலம் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதே போல சேலம் மாரியப்பனுக்கு த.மா.கா சார்பில் ரூ.50ஆயிரம் பரிசு வழங்கப்படும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மத்திய அரசும் 75 லட்சம் பரிசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: