அமெரிக்காவில் நடந்த டேலன்ட் ஷோ – `வேர்ல்டு பெஸ்ட்’ டைட்டில் வென்ற தமிழகச் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்!

அமெரிக்காவில் நடந்த டேலன்ட் ஷோ - `வேர்ல்டு பெஸ்ட்’ டைட்டில் வென்ற தமிழகச் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்!

அமெரிக்காவில் நடந்த டேலன்ட் ஷோ – `வேர்ல்டு பெஸ்ட்’ டைட்டில் வென்ற தமிழகச் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்!

’தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று உலக முழுவதிலுள்ள பொழுதுபோக்கு ரசிகர்களை தன்பக்கம் திருப்பி இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்.

’’தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’’ என்ற பொழுத்து போக்கு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதனை புகழ்பெற்ற ஹாலிவுட் தொகுப்பாளரான ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்கிறார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


கடந்த பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து கலைஞர்கள் குழுவாகவும் , தனி நபராகவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த பியானா கலைஞரான சிறுவன் லிடியன் நாதஸ்வரமும் கலந்து கொண்டார்.

லிடியன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது முதலே, தனது அசாத்திய திறமையால் ரசிகர்கள் பலரின் பாராட்டுதலை தொடர்ந்து பெற்று வந்தார்.

இதன் காரணமாக பிரபல ஹாலிவுட் டிவி நிகழ்சிகளான எலன் ஷோ உள்ளிட்டவைகளில் லிடியன் கலந்து கொண்டார். ரஹ்மான் உள்ளிட்ட இசை அமைப்பாளர்கள் லிடியனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் இறுதிச் சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் லிடியன் நாதஸ்வரம்.

1900-ம் ஆண்டில் ரஷ்யன் இசைக்கலைஞரால் உருவாக்கப்பட்ட ‘பிளைட் ஆப் பம்பிள்பி’ என்ற இசையை வாசித்திருக்கிறார் லிடியன். விரல்களில் வேகம் இருந்தால் தான் இந்த இசையை வாசிக்க முடியும் என்ற நிலையில் இந்த இசையை சராசரியாக மனிதர்கள் வாசிப்பதைவிட இரண்டு மடங்கு வேகத்தில் வாசித்து அசத்தி இருக்கிறார் லிடியன். முதலில் அந்த ஒரிஜினல் இசை போலவே உரிய வேகத்திலேயே வாசித்தார் லிடியன். பின்னர் ஓரிஜினல் இசையை விட வேகமாக நிமிடத்துக்கு 208 பீட்ஸில் அந்த இசையை வாசித்து அனைவரையும் ஆச்சரியமடையச் செய்தார்.

ஆனால் அடுத்தக்கட்டமாக 208 பீட்ஸ் வேகத்தை விட 325 பீட்ஸ் வேகத்தில் வாசித்ததில் அரங்கமே அதிர்ச்சியில் உறைந்து போனது. அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து கைதட்ட, லிடியனின் தந்தை ஆனந்தத்தில் கண்கலங்கி நெகிழ்ந்துபோனார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சியில் இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து இசை கலைஞர்களை மகிழ்வித்த பட்டத்தை வென்ற லிடியனுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

லிடியன் நாதஸ்வரம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாதவன் உட்பட திரைப்பட கலைஞர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: