இலங்கை போரின் சாட்சியாகத் திகழ்ந்த மேரி கால்வினின் வாழ்க்கை ஹாலிவுட்டில் படமாகிறது!

இலங்கை போரின் சாட்சியாகத் திகழ்ந்த மேரி கால்வினின் வாழ்க்கை ஹாலிவுட்டில் படமாகிறது!

இலங்கை போரின் சாட்சியாகத் திகழ்ந்த மேரி கால்வினின் வாழ்க்கை ஹாலிவுட்டில் படமாகிறது!

இலங்கை உள்நாட்டுப் போரின் சாட்சியமாக வர்ணிக்கப்பட்ட ஊடகவியலாளர் மேரி கால்வினின் வாழ்க்கை வரலாறு ‘தி பிரைவேட் வார்’ என்ற பெயரில் ஹாலிவுட்டில் திரைப்படமாகிறது.

எங்கெல்லாம் யுத்தம் நடைபெற்று அப்பாவி மக்கள் பாதிப்படைகிறார்களோ அங்கெல்லாம் சென்று செய்தி சேகரித்து அந்நாட்டு மக்களின் மனசாட்சியாகப் பதிவு செய்த ஊடகவியலாளர் மேரி கால்வின்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

அமெரிக்காவில் பிறந்த மேரி கால்வின் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் புகழ் பெற்ற சண்டே டைம்ஸ் பத்திரிகையின் வெளிநாட்டு செய்தியாளராகப் பணியாற்றியவர். இதனால் பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தார்.

2001-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வன்னி பகுதிகளுக்குச் செல்ல செய்தியாளர்களுக்கு இலங்கை ராணுவம் தடை விதித்திருந்தது. ஆனால் இலங்கை ராணுவத்தின் கண்களுக்கு மண்ணைத் தூவிவிட்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகளுக்குள் சென்று செய்தி சேகரித்தார் மேரி கால்வின்.

பின்னர் அங்கிருந்து வெளியேறிய போது ராணுவத்தின் கண்ணில் பட்டுவிட்டார். மேரி கால்வினைப் பார்த்ததும் ராணுவத்தினர் சராமரியாக துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களையும் நடத்தினர். பின்னர் ராணுவத்தினரிடம் சிக்கிய மேரி கால்வினின் ஆடைகள் கிழிக்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டார். மேலும் இந்தத் தாக்குதலில் ஒரு கண்ணில் பார்வையை முற்றிலுமாக இழந்தார் மேரி கால்வின்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தைப் பற்றி மேரி கால்வின் எழுதிய போது ”இலங்கையில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த துன்பத்தை விட நான் பட்ட துன்பம் ஒன்றும் இல்லை என்றாலும் தனது அனுபவம் தமிழ் மக்களின் வேதனையைச் சொல்லப் போதுமானது” என்று இலங்கை உள்நாட்டுப் போரை உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

பின்னர் கொசோவோ, செசென்யா மற்றும் அரபு நாடுகளிலும் தொடர்ந்து பணியாற்றிய மேரி கால்வின் கடந்த 22.02.2012 அன்று சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டு போர் குறித்த செய்தி சேகரிக்கச் சென்ற போது ஒரு வெடிகுண்டு வெடிப்பின் போது உயிரிழந்தார்.

தற்போது மேரி கால்வினின் வாழ்க்கை வரலாறு ஹாலிவுட்டில் ‘தி பிரைவேட் வார்’ என்ற பெயரில் திரைப்படமாகிறது. இயக்குநர் மேத்யூ ஹெயின்மேன் இயக்கும் இந்தப் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை ரோஸ்மண்ட் பைக் மேரி கால்வினாக நடிக்கிறார்.

எழுத்தாளர் ஷோபா சக்தி இந்தப் படத்தில் தமிழ்ச்செல்வன் என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: