ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும்!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ஆதரவும், எதிர்பும்!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ஆதரவும், எதிர்பும்!

அமெரிக்காவில் இருக்கும் உலகின் மிக முக்கியப் பல்கலைக்கழகங்களில் ஒன்று, ஹார்வர்டு பல்கலைக்கழகம். அங்கு தமிழ் இருக்கை அமைப்பது உலகத் தமிழர்களின் நீண்டகால கனவாகும். பல்கலைக்கழகம் ஒன்றில், மொழிக்கான இருக்கை ஏற்படுத்தப்படுவது, அந்த மொழிபற்றி ஆய்வு மேற்கொள்வதற்கும் அதன் சிறப்புகளை உலக அரங்கில் எடுத்துச்செல்வதற்கும் உதவும். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.40 கோடி தேவைப்படுகிறது. அதில், ரூ.10 கோடியை தமிழக அரசு அளித்துவிட்டது. கமல்ஹாசன், வைரமுத்து, விஷால் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் நிதியளித்தனர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க கொங்கு மண்டலத்தில் ரூ.10 லட்சம் நிதி திரட்டல்!


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


உலக அளவில் பிரசித்தி பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழைத் தவிர மற்ற 6 செம்மொழிகளுக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தென்கிழக்கு ஆசிய கல்வித் துறையின் ஒரு அங்கமாக தமிழ் இருக்கையை நிறுவும் முயற்சியில், அமெரிக்காவில் வாழும் மருத்துவர்கள் ஜானகிராமன், திருஞானசம்பந்தம் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இதன் மூலம் தமிழ் மொழியின் வளம் உலகறியச் செய்யப்படும் என்பதால், இது தமிழ் வளர்ச்சிக்கான ஆக்கபூர்வ முயற்சியாக கருதப்படுகிறது.

கவிஞர் வைரமுத்து ஹார்வர்டு தமிழ் இருக்கை குறித்து பேசியதாவது:-

செம்மொழிக்கான தகுதிகள் என்று அறிவுலகம் வகுத்திருக்கிற அத்தனை தகுதிகளையும் கொண்ட பெருமை தமிழ் மொழிக்கு உண்டு. நெடுங்கால இலக்கியங்களையும் இலக்கணங்களையும் அது படைத்திருக்க வேண்டும். சில மொழிகளை ஈன்றெடுத்த தாய்த்தகுதி கொண்டிருக்க வேண்டும். உலக நாகரிகத்துக்குப் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். இடையறாத தொடர்ச்சியோடு இயங்கி வரவேண்டும். இவைகளெல்லாம் செம்மொழிக்கென்று குறிக்கப்பட்ட சில தகுதிகள்.

இவை அனைத்தும் கொண்ட தமிழ் செம்மொழியென்று எப்போது அறிவிக்கப்பட்டதோ, அப்போதே உலக பல்கலைக்கழகங்களின் இருக்கைகளில் அமரும் தகுதியை பெற்று விட்டது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இருக்கையில் தமிழ் அமரும் காலம் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறது.

ஹார்வர்டு பல்கலைக்கழகம் 382 ஆண்டுகள் பழைமையானது. சில உலக தலைவர்களையும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலரையும் பெற்றுத்தந்த பெருமைமிக்கது. இங்கே மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் உலக கவனத்திற்கு உள்ளாகின்றன. இத்தனை பெருமைமிக்க பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைத்து அமரப்போவது தமிழுக்கு பெருமைதானே என்று சிலர் கருதலாம். அதை மறுப்பதற்கில்லை. ஆனால், 382 ஆண்டுகள் பழைமையான ஒரு பல்கலைக்கழகத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் மூத்த மொழியான தமிழ் அமரப்போவது அந்த பல்கலைக்கழகத்திற்குத்தான் பெருமை என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இந்த இருக்கையில் நிகழவிருக்கும் ஆய்வுகள் தமிழ் மொழியின் அதிகாரம் மிக்க உண்மைகளை உலகுக்கு அறிவிக்கும் என்று நம்பலாம். இந்திய பண்பாட்டின் சரிபாதியை வகுத்துக் கொடுத்தது தமிழ். ஆனால், தமிழ் இன்னும் உலகத்தின் விளிம்பு வரைக்கும் சென்று விழவில்லை. அதற்கான அரசியல் காரணங்களையும் சமூக காரணங்களையும் நாம் அறிவோம். வடமொழி இலக்கியங்களை ஐரோப்பாவில் அறிமுகம் செய்ய ஒரு மாக்ஸ் முல்லர் கிடைத்ததுபோல், அகிலத்திற்கு தமிழை அறிமுகம் செய்ய இந்த தமிழ் இருக்கை சில அறிஞர் பெருமக்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.

இந்த தமிழ் இருக்கையை முன்னெடுத்துச்சென்ற டாக்டர் ஜானகிராமன், திருஞான சம்பந்தன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் இருக்கைக்கு கொடை தந்த பெருமக்களெல்லாம் நன்றிக்குரியவர்கள். இதுவரை சில மாணவர்களுக்கு மட்டுமே தமிழ் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் தமிழுக்கு ஒரு பிரிவையே தொடங்கும் அதிகாரம் பெறுகிறது. மூவாயிரம் ஆண்டு கண்ட தமிழ் அமெரிக்காவில் முடிசூடுகிறது.

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு பணம் வசூலிப்பது ஊழல்: சிவ அய்யாதுரை (உலகுக்கு மின்னஞ்சலை முதலில் அறிமுகபடுத்தியவர்):

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை பற்றி சர்ச்சை எழுந்துள்ளது. ஹார்வர்டு தமிழ் இருக்கை மோசடி என்று அமெரிக்க வாழ் தமிழர் டாக்டர் சிவா கட்டுரை எழுதியுள்ளார். தங்களை வளப்படுத்திக் கொள்ளவே ஹார்வர்டு பல்கலைக்கழகம் நிதி வசூலிக்கிறது என்று அவர் கூறியுள்ளார். தமிழ் வளர்ச்சிக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகமே நிதி உதவி தரலாமே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் 350 ஆண்டுகள் பழமையான ஹார்வர்டு பல்கலைக்கழகம் இருக்கிறது . இதில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்கும் முயற்சி கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: