அமெரிக்க ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ தலைமை நிதி அதிகாரியாக, சென்னை பெண் நியமனம்!

அமெரிக்க ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ தலைமை நிதி அதிகாரியாக, சென்னை பெண் நியமனம்!

அமெரிக்க ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ தலைமை நிதி அதிகாரியாக, சென்னை பெண் நியமனம்!

சென்னையில் பிறந்து, சென்னை பல்கலைக்கழத்தில் படித்த திவ்யா சூர்யதேவரா அமெரிக்காவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ்(ஜிஎம்) நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக(சிஎப்ஓ) நியமிக்கப்பட உள்ளார். அவர் விரைவில் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

கார்ப்பரேட் பைனான்ஸ் அமைப்பின் துணைத் தலைவராக இருக்கும் திவ்யா சூர்யதேவரா, செப்டம்பர் 1-ம் தேதி ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகப் பதவி ஏற்பார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது ஜிஎம் நிறுவனத்தின் சிஎப்ஓ அதிகாரியாக சக் ஸ்டீவன்ஸ் இருந்துவருகிறார், இவர் ஓய்வுக்குப்பின் திவ்யா அந்தபதவிக்குவர உள்ளார்.

திவ்யா சூர்யதேவரா(வயது39), அமெரிக்காவின் மிகப்பெரிய ஆட்டமொபைல் நிறுவனத்தின் மிக முக்கியமான பதவிக்கு வரும் 2-வது பெண் ஆவார். இப்போது, ஜிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மேரி பாரா(வயது56) என்ற பெண் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பிறந்த திவ்யா சூர்யதேவரா தனது இளநிலை மற்றும் முதுநிலை வணிகவியல் பட்டப்படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்னர் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழக்தில் எம்பிஏ பயில்வதற்காகத் தனது 22-வயதில் அமெரிக்கா சென்றார்.

திவ்யா பட்டயக் கணக்காளராகவும், நிதி ஆய்வாளராகவும் பயிற்சி பெற்றார். அமெரிக்காவில் உள்ள யுபிஎஸ் மற்றும் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். அதன்பின் கடந்த 2005-ம் ஆண்டு டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த ஜிம் நிறுவனத்தில் திவ்யா தனது 25-வயதில் பணியில் சேர்ந்தார்.

ஜிஎம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக திவ்யா நியமிக்கப்பட்டது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி மேரி பாரா கூறுகையில், திவ்யாவின் அனுபவமும், பல்வேறு விஷயங்களில் அவரின் தலைமைப் பண்பும் நிதித்துறையில் மிகச்சிறந்த மாற்றங்களையும், வலிமையான தொழில்வளர்ச்சியையும் கொண்டு வந்துள்ளது. அதன் காரணமாக பல ஆண்டுகளாக நாங்கள் சிறப்பாகவே பணியாற்றி இருக்கிறோம். நிதித்துறைக்கு திவ்யாவின் வருகை நிறுவனத்தின் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தற்போது நிதி அதிகாரியாக இருக்கும் ஸ்டீவன்ஸ்(வயது58) கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து அந்த பதவியில் இருந்து வருகிறார். ஏறக்குறைய 40 ஆண்டுகளாக ஜிஎம் நிறுவனத்தில் ஸ்டீவன்ஸ் பணியாற்றி வருகிறார். ஸ்டீவன்ஸ் ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து நிறுவனத்தின் ஆலோசகராகச் செயல்பட உள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: