மஞ்சள் காமாலைக்கு தீர்வு… ஃபோர்ப்ஸ் சாதனைப் பட்டியலில் இரு தமிழர்கள்!

மஞ்சள் காமாலைக்கு தீர்வு... ஃபோர்ப்ஸ் சாதனைப் பட்டியலில் இரு தமிழர்கள்!

மஞ்சள் காமாலைக்கு தீர்வு… ஃபோர்ப்ஸ் சாதனைப் பட்டியலில் இரு தமிழர்கள்!

அண்மையில் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட ‛அதிசிறந்த இளம் சாதனையாளர்கள்’ பட்டியலில் விவேக்கின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. விவேக், சிவக்குமார் இருவரும் ‛நியோலைட்’ என்ற நிறுவனத்தின் மூலம், மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் ஒளிக்கதிர் கருவி சாதனத்தை உருவாக்கி, அதற்கான காப்புரிமை பெற்றிருக்கிறார்கள்.

பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தைக்கு ஏதாவது பிரச்னை என்றால் பெற்றோர்களும், உறவினர்களும் பதறி விடுகிறார்கள். இந்தப் பதற்றத்தை தணிக்கும் வகையில் மருத்துவ உபகரணம் தயாரித்து வருகிறோம். குறிப்பாக, பிறக்கும் பத்து குழந்தைகளில் ஆறு குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலையின் தாக்கம் இருக்கிறது. இதனை விரைவாகவும், சக்தி வாய்ந்த தொழில்நுட்பத்தின் மூலமும் தடுத்து விடலாம். இவை தவிர மூச்சுத் திணறல், போதிய எடையின்மை, குறைந்த வெப்பநிலை போன்ற பிரச்சனைகளும், பிறக்கும் குழந்தைகளுக்கு சிக்கலைக் கொடுக்கின்றன. இதனை எளிய முறையில் குணப்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறோம்’ என்கிறார்கள் விவேக், சிவக்குமார் இருவரும்..

மஞ்சள் காமாலைக்கு தீர்வு... ஃபோர்ப்ஸ் சாதனைப் பட்டியலில் இரு தமிழர்கள்!

மஞ்சள் காமாலைக்கு தீர்வு… ஃபோர்ப்ஸ் சாதனைப் பட்டியலில் இரு தமிழர்கள்!

‛‛பிறக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருந்தால், குறிப்பிட்ட அலைவரிசையில் ஒளிக் குளியல் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். ஒவ்வொரு நாளும் 300 குழந்தைகள் இந்தப் பிரச்னையால் இறக்கின்றன. இதில் 99 சதவீதம் இந்தியா, வளர்ச்சியடையாத மற்றும். ஆப்பிரிக்க நாடுகளில் பிறக்கும் குழந்தைகள்தான்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இதனைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் உள்ள மருத்துவ சாதனங்கள் திறன் குறைந்ததாகவும், அதிகமான விலை கொண்டதாகவும் இருக்கின்றன. நாங்கள் தயாரிக்கும் கருவியின் விலை ஏற்கனவே சந்தையில் உள்ள சாதனத்தை விட 90% குறைந்த விலையிலும், பேட்டரி மற்றும் சூரிய எரிசக்தி மூலம் இயங்கும் வகையிலும் வடிவமைத்து இருக்கிறோம். இந்த கருவிக்கு அமெரிக்காவிலும், இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் நிறையவே ‛டிமாண்ட்’ இருக்கிறது.

நாங்கள் ஏற்கனவே பரிசோதனை அடிப்படையில் ‛பில்கேட்ஸ் பவுண்டேஷன்’ உடன் இணைந்து அஸ்ஸாம் பகுதியில் பணியாற்றி இருக்கிறோம். இங்கு ஒன்றரை ஆண்டுகளில் மஞ்சள் காமாலை பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளில் 66 சதவீதம் பேரைக் குணப்படுத்தி இருக்கிறோம். விரைவில் உலக அளவில் களம் இறங்க தயாராகி வருகிறோம்” என்கிறார் விவேக்.

விவேக் டி.ஏ.பி. மற்றும் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி சுந்தராஜன் இன்ஜினீயரிங் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தார். சிவக்குமார் சென்னையில் எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் பயோமெடிக்கல் என்ஜினீயரிங் படித்திருக்கிறார். இவர் படிப்பை முடித்தவுடன் டெல்லியில் மருந்து உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் வேலை பார்த்தார்.

இருவரும் மேலாண்மை படிப்பிற்காக அரிசோனா பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தனர். இருவரும் 2014-ம் ஆண்டு தொழில்முனைவோருக்கான போட்டியில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் திட்டத்தை முன் வைத்து இருக்கிறார்கள். இந்தப் போட்டியில் இவர்கள் வெற்றி பெற்று, திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அலுவலக இடம், ஆய்வக இடம், பணியாற்றுவதற்கான வசதி போன்றவையும் வழங்கி, மருத்துவ குழு ஆலோசனையும் வழங்கி இருக்கிறார்கள். இவர்களது நிறுவனத்துக்கு ஏராளமான முதலீடுகளும் குவிந்து வருகின்றன.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இரு தமிழர்கள்

‘அமெரிக்காவில் மருத்துவக் கருவிகள் தயாரிப்புக்கு அவ்வளவு எளிதாக அனுமதி கிடைக்காது. மருத்துவத் துறையின் அனுமதி பெறுவது என்பது மிகப்பெரிய சவால். இந்தச் சவாலைக் கடந்து விட்டாலே அது மிகப்பெரிய வெற்றிதான்’ என்று சொல்லும் விவேக், இந்தியாவில் படிப்பவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் அல்லது உயர் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. இனி வரும் காலங்களில் இதனையும் யோசிக்க வேண்டும். வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. விரைவில் இந்திய வர இருக்கிறேன். இந்தியாவில் இதுகுறித்து இளைஞர்களிடம் பேசுவேன்’ என்றார்.

தற்போது தமிழ்நாட்டில் இருந்த இடம்பெயர்ந்த இளைஞர்கள் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இது மிகுந்த நம்பிக்கை தருகிறது.

கலக்குங்க விவேக் – சிவக்குமார். தமிழக இளைஞர்களுக்கும் வழிகாட்டுங்கள். உலகத் தமிழர் பேரவை பெருமை கொள்கிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: