ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை வர ஆர்வம் காட்டியவர்களுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் விருது!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை வர ஆர்வம் காட்டியவர்களுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் விருது!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை வர ஆர்வம் காட்டியவர்களுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் விருது!

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு 5 லட்சம் டாலர்கள் வழங்கிய மருத்துவர். திருஞானசம்பந்தன் மற்றும் 2 லட்சம் டாலர்கள் வழங்கிய பால்பாண்டி ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது அமெரிக்கத் தமிழ்ச்சங்கம்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் ஃபெட்னாவின் ( FETNA) `தமிழர் கலைவிழா’ நடைபெற்று வருகிறது. ஜூன் 29-ம் தேதி தொடங்கிய விழா இன்றுடன் நிறைவடைகிறது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், மெட்ரோ ப்ளக்ஸ் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த விழாவில் உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள், பேச்சாளர்கள், கலைஞர்கள் என 5,000 பேர் பங்கேற்றுள்ளனர். மேலும், இந்த விழாவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டதுக்கான வெற்றி விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து விழாவின் இறுதி நாளான இன்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவதுக்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பைப் பல்கலைக்கழகம் சார்பில் உலக நாடுகளுக்கு அறிவிக்கப்பட உள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

டல்லாஸில் நேற்று நடைபெற்ற விழாவில் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு அதிக நன்கொடை வழங்கிய அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர். திருஞானசம்பந்தன் மற்றும் பால்பாண்டி ஆகியோருக்கு அமெரிக்க தமிழ் முன்னோடி விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்றபின் மேடையில் பேசிய பால்பாண்டி, ‘நாங்கள் இங்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு வந்த போது தமிழர்கள் என 10-பேர் இருந்தோம் ஆனால் இன்று பத்தாயிரம் பேர் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் கொடுத்ததை விட உங்களால் எங்களுக்குக் கிடைத்தது தான் அதிகம். இன்று வழங்கப்பட்டுள்ள இந்த விருதும் நீங்கள் எங்களுக்கு அளிப்பதுதான். தமிழர்களுக்குத் தான் நாங்கள் மிகுந்த நன்றி சொல்ல வேண்டும்” எனக் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>