இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம், பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனேரியோவில் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று வந்தவர் இளம் வீராங்கனை இளவேனில் வாலறிவன்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் பங்கேற்று விளையாடி வருகிறார். தற்போது சீனாவில் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் பெற்று சாதனை படைத்தார். இன்று நடைபெற்ற போட்டியில் 250.8 புள்ளிகள் பெற்றவர், மீண்டும் ஒரு முறை தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றவர், தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்று வருகிறார்.