​ஆப்பிள் நிறுவனத்தின் விருது வென்று அசத்திய தமிழக இளைஞர்!

ஆப்பிள் நிறுவனத்தின் விருது வென்று அசத்திய தமிழக இளைஞர்!

ஆப்பிள் நிறுவனத்தின் விருது வென்று அசத்திய தமிழக இளைஞர்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான ஆப்பிள் நிறுவனம் சார்பில் அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்று வரும் மென்பொருள் வடிவமைப்பவர்களுக்கான மாநாட்டில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ‘Apple Design Award’ என்ற விருது வழங்கி கவுரவித்துள்ளது.

“Calzy 3” என்ற அவருடைய புதுமையான கால்குலேட்டர் மொபைல் அப்ளிகேஷனுக்காக இந்த விருதை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. விருது வழங்கப்படுவது குறித்து ராஜாவுக்கு முன்னதாக தெரியப்படுத்தாமலே ஆப்பிள் நிறுவனம் அவருக்கு இந்த விருதை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. தன் விருப்ப நட்சத்திரமான நடிகர் ரஜினியின் உருவம் பதித்த டி-ஷர்ட் அணிந்து மேடையில் இந்த விருதை பெற்ற ராஜா மெய்சிலிர்த்துப் போயுள்ளார்.

தேனியைச் சேர்ந்த ராஜா விஜயராமன் என்ற இந்த இளைஞர், மெக்கானிக்கல் பிரிவு பொறியியல் பட்டதாரி ஆவார். கிராபிக்ஸ் துறையில் திறன்களை வளர்த்துக் கொண்ட ராஜா, பின்னர் சென்னைக்கு இடம்பெயர்ந்து, ஒரு சில அனிமேஷன் திரைப்படங்களுக்கு கிராஃபிக்ஸ் கலைஞராக (ரஜினியின் படம் உட்பட) பணிபுரிந்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

அந்த சமயத்தில் தான் முதன் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் ஒன்றை இவர் வாங்கியுள்ளார். அந்த மொபைலில் செயலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்திய போது மொபைல் செயலிகள் மீது இவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர் மொபைல் செயலிகளை உருவாக்குதல் (Coding) குறித்து அறிந்துகொண்டு தானும் அத்தளத்தில் ஒரு செயலியை உருவாக்க எண்ணியுள்ளார்.

அப்போது, வழக்கமான கால்குலேட்டருக்கு பதிலாக புதுவிதமான கால்குலேட்டர் ஆப் ஒன்றை வடிவமைக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டார்.

ஐஓஎஸ் இயங்குதளத்தில் Multitasking, Face ID மற்றும் Touch ID ஆகிய வசதிகளை பயன்படுத்தி புதிதாக ‘Calzy’ என்ற செயலியை ராஜா வடிவமைத்துள்ளார்.

இவரின் இந்த செயலியில் வழக்கமான கால்குலேட்டரில் இருக்கும் நினைவக செயல்பாடுகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக இவராகவே ஒரு கணக்கிடும் செயல்பாட்டினை புகுத்தியுள்ளார். இது அறிவியல் கால்குலேட்டராக ( Scientific Calculator) செயல்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியில் மேற்கொள்ளப்படும் கணக்கீடுகளை Drag & Drop முறையில் இதர செயலிகளுக்கும் கொண்டு செல்லும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் bookmark மற்றும் saved history ஆப்ஷன்களும் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கணக்கீடுகளை நேரம், தேதி வகையில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். மேலும் இதில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட வரி முறையில் கணக்கீடுகளை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம் என்பது சிறப்பு.

2014ஆம் ஆண்டு ராஜா விஜயராமன், உருவாக்கிய Calzy செயலி, தற்போது மேலும் மெருகேற்றப்பட்டு “Calzy 3” என்ற மேம்பட்ட வெர்ஷனில் கிடைக்கிறது.

ராஜா விஜயராமன் உருவாக்கிய இந்த நவீன செயலி உலகம் முழுதும் உள்ளவர்களால் பெரிதும் விரும்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்சமயம் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிப்போரால் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலி 65 உலக மொழிகளில் கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. இதனை 159 ரூபாய் செலுத்தி ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட மொபைல்களில் மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

மெக்கானிக்கல் பொறியியல் பட்டதாரியாக இருந்து தனது சுய முயற்சியின் மூலம் பரீட்சயமே இல்லாத மொபைல் செயலி வடிவமைப்புத் துறையில் காலூன்றி, இன்று அத்துறையில் ஜாம்பவான்களுள் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து உலகலாவிய அங்கீகாரம் பெற்றுள்ள ராஜா விஜயராமன் இளைஞர்களின் தன்னம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: