தமிழக கலாச்சாரத்தில் ஈர்ப்பு ஏற்பட்டதால் காது, மூக்கு குத்திக் கொண்ட அமெரிக்க பெண் நீதிபதிகள்!

தமிழக கலாச்சாரத்தில் ஈர்ப்பு ஏற்பட்டதால் காது, மூக்கு குத்திக் கொண்ட அமெரிக்க பெண் நீதிபதிகள்!

தமிழக கலாச்சாரத்தில் ஈர்ப்பு ஏற்பட்டதால் காது, மூக்கு குத்திக் கொண்ட அமெரிக்க பெண் நீதிபதிகள்!

கும்பகோணத்துக்கு சுற்றுலா வந்த தென் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் நீதிபதிகள், தமிழக கலாச்சாரத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதை அடுத்து நகைக் கடைக்கு சென்று காது, மூக்கு குத்திக் கொண்டனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


தென் அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆண்டரஸ்வோர்மொல்(50). இவர் அங்கு உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். மேலும் யோகாவில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.

இவரது தலைமையில் தென் அமெரிக்காவைச் சேர்ந்த இரு பெண் நீதிபதிகள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் என 8 பேர் கொண்ட குழுவினர் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு சிவ தலத்தில் வழிபடுவதற்காக வருவது வழக்கம்.

இந்நிலையில், இந்தக் குழுவினர் தற்போது இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். கடந்த 7-ம் தேதி கும்பகோணம் வந்த இக்குழுவினர், இங்குள்ள கோயில்களுக்குச் சென்றனர். அங்கு பெண்கள் தோடு, மூக்குத்தி அணிந்திருப்பதை பார்த்து வியந்த அவர்கள், தாங்களும் தோடு, மூக்குத்தி அணிய விருப்பப்பட்டனர். அதைத் தொடர்ந்து, கும்பகோணத்தில் உள்ள ஒரு நகைக்கடைக்கு அவர்கள் சென்றனர். அங்கு 2 நீதிபதிகள் உட்பட 3 பேர், நவீன கருவி மூலம் காது மற்றும் மூக்கு குத்திக்கொண்டனர்.

இதுகுறித்து நீதிபதி லாரா கூறியதாவது: நாங்கள் கடந்த 17 ஆண்டுகளாக இந்தியாவுக்கு ஆன்மிக சுற்றுலா வந்து செல்கிறோம். குறிப்பாக சிவராத்திரி விழாவில் பங்கேற்பது எங்களது வழக்கம்.

இந்த முறை கும்பகோணம் வந்தபோது தமிழர்கள் நகை அணியும் கலாச்சாரம் எங்களுக்கு பிடித்திருந்தது. ஆகவே நாங்களும் அணிய வேண்டும் என்று விருப்பப்பட்டோம்.

அதன்படி காது மற்றும் மூக்கு குத்திக் கொண்டோம். நாங்கள் வரும் சிவராத்திரி தினத்தின் போது வாரணாசி செல்ல உள்ளோம் என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: