அமெரிக்க விருது பெறும் தமிழக மாணவி!

அமெரிக்க விருது பெறும் தமிழக மாணவி!

அமெரிக்க விருது பெறும் தமிழக மாணவி!

டி.எச்.எஃப்.எல். அமெரிக்கா ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இந்தியப் பள்ளி – மாணவ, மாணவிகளுக்கான தனது அமெரிக்கா சமூக சேவை விருதை வழங்குவதற்கான விண்ணப்பங்களை வரவேற்றது. சுமார் நாலாயிரம் பேர் பங்கு கொண்டதில் பரிசீலனைக்குப் பிறகு, 29 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாயினர். அவர்களிலிருந்து 2 மாணவிகள் அமெரிக்க விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

ஒருவர் புதுடில்லியைச் சேர்ந்த பள்ளி மாணவி. பெயர் இஷிதா மங்களா. மற்றொருவர் தமிழ்நாட்டு மாணவி பானுப்ரியா. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, காளாச்சேரியின் மாணவி. 13 வயதுச் சிறுமி, 8 -ஆம் வகுப்பு படிக்கிறார்.

விருதாளர்களுக்கு விருதுக்கான சான்றுடன், தலா ஒரு தங்கப் பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும், சமீபத்தில் புதுடில்லியில் விழாவில், சமூகசேவை அமைப்பின் உயரதிகாரி அனுப் பாப்பியால் – சாய்னா நேவாலிடமிருந்து விருது பெற்றார் பானுப்பிரியா.

விருது பெற்ற, தமிழ்நாட்டு மாணவி பானுப்பிரியா, சிறு வயது முதலே, தனது பள்ளி மாணவியர் மற்றும் ஊராரிடையே மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதற்காகத் தனது காளாச்சேரி கிராமத்தில் சிறுவர், சிறுமியரை ஒன்று திரட்டிக் கூட்டம் போட்டு ஊர்வலம் நடத்தியும், தெருவுக்கு தெரு வீதி நாடகம் போட்டும் தனது இலக்கை எட்டிப் படிக்கத் திட்டமிட்டுத் தொண்டாற்றி வருகிறார்.

அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டு அங்குள்ள மருத்துவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்து மருந்து முகாம்களை நடத்தி, கிராமமக்கள் கவனக் குறைவாக உள்ள நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இப்பணிகளில் பள்ளியின் ஆசிரியர்களும் ஊரின் படித்த இளைஞர்களும் யோசனைகளை வழங்கி உதவி வருகின்றனர். மேலும், கிராமத்துப் பெண்களுக்குத் தேவைப்படும் மாதவிலக்குக் கால ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்கிறார். அச்சமயங்களில் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதாரப் பழக்க வழக்கங்கள் குறித்தும் தகுந்த விழிப்புணர்வை மேற்கொள்ள வழிவகை செய்து தருகிறார். இவரது இந்தத் தொண்டால் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.

மொத்தத்தில், பானுப்பிரியாவின் தன்னலமற்ற தொண்டின் காரணமாக அந்தக் காளாச்சேரி கிராமமே மற்றக்கிராமங்களுக்கு முன்மாதிரியாக இருந்து வழிகாட்டி வருகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: