கீழடியில் அகழாய்வு குழிகள் மூடும் பணி தொடக்கம்!

கீழடியில் அகழாய்வு குழிகள் மூடும் பணி தொடக்கம்!

கீழடியில் அகழாய்வு குழிகள் மூடும் பணி தொடக்கம்!

கீழடியில் 4ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி முடிந்ததை அடுத்து, அகழ்வாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடும் பணிகள் தொடங்கப்பட்டது. இப்பணி 3 நாட்கள் நடைபெறும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 30 வரை நடந்த 4ம் கட்ட அகழாய்வு பணி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் அப்போது குழிகளை மூட இயலவில்லை. இதன் காரணமாகவே தற்போது குழிகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு 5ம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு அனுமதி தந்த பின் மீண்டும் வேலைகள் தொடங்கும்.

இந்த கீழடி அகழாய்வில் தங்க ஆபரணங்கள், பிராமி எழுத்துக்கள், கட்டட பகுதிகள் உள்ளிட்ட 5 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கீழடி அகழாய்வு குழிகள் மூடும் பணி ஒத்திவைப்பு!... கீழடி அகழாய்வு குழிகள் மூடும் பணி ஒத்திவைப்பு! சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடி பள்ளிச்சந்தை புதூரில் நடந்த அகழாய்வில், குழிகள் மூடும் ப...
கீழடியில் ரூ. 1 கோடி மதிப்பில் 2 ஏக்கர் பரப்பளவில... கீழடியில் ரூ. 1 கோடி மதிப்பில் 2 ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியகம்! - மாஃபா பாண்டியராஜன்! சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல்துறை சார்பில்...
கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்கள் பற்றி மாணவர்களுக்கு... கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்க ஏற்பாடு! சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தையில் தமிழக தொல்லியல் துறை ...
கீழடி அகழாய்வு 30-ல் நிறைவு!... கீழடி அகழாய்வு 30-ல் நிறைவு! சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், தமிழக தொல்லியல் துறை சார்பில், ஏப்ரல், 19ல், 55 லட்சம் ரூ...
Tags: