கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே, 13ம் நூற்றாண்டை சேர்ந்த அதியமான் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே, 13ம் நூற்றாண்டை சேர்ந்த அதியமான் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே, 13ம் நூற்றாண்டை சேர்ந்த அதியமான் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தேன்கனிக்கோட்டை அருகே, 13ம் நூற்றாண்டை சேர்ந்த அதியமான் கல்வெட்டை, ஓய்வு பெற்ற தொல்லியல் துறையினர், அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் கண்டுபிடித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே குந்துக்கோட்டை பகுதியில், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை துணை இயக்குனரான கோவையை சேர்ந்த பூங்குன்றன், கிருஷ்ணகிரி அடுத்த சந்தூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அதியன் மரபை சேர்ந்த, விடுகாதழகிய பெருமான் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இது குறித்து, அவர்கள் கூறியதாவது: குந்துக்கோட்டை பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில், இரு பாறைகளில் இரண்டு கல்வெட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டு, கி.பி., 13ம் நூற்றாண்டை சேர்ந்தது. கல்வெட்டின் மேல் பகுதியில், ஒரு பீடம் அமைக்கப்பட்டு, பீடத்தின் மேல் இரண்டு அடி உயரத்திற்கு வில் வரையப்பட்டுள்ளது. வில்லுக்கு மேல் பகுதியில், வெண்கொற்றை குடை செதுக்கப்பட்டுள்ளது. வலது மற்றும் இடது பக்கம், சாமரம் மற்றும் குத்துவிளக்கு உள்ளது. கல்வெட்டின் முதல் நான்கு வரிகள் சமஸ்கிருத எழுத்திலும், கன்னட மொழியிலும் எழுதப்பட்டுள்ளது. மீதமுள்ள எட்டு வரிகள், தமிழ் வெண்பா பாட்டு வடிவில் உள்ளது. இந்த பாடல்களில், வில்லை பற்றி புகழ்ந்து பாடப்படுகிறது. பொதுவாக வில் சின்னம் சேர மன்னர்களுக்கு சொந்தமானது என, கூறுகின்றனர். ஆனால், இங்கு அதியமானுக்குரியதாக வில் கொடி கூறப்படுகிறது. இந்த கல்வெட்டு, அதியன் மரபை சேர்ந்த விடுகாதழகிய பெருமான் கல்வெட்டாக இருக்க வேண்டும் என கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: