இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்! மருத்துவமனையில் ஒருவர் அனுமதி!

இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்! மருத்துவமனையில் ஒருவர் அனுமதி!

இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்! மருத்துவமனையில் ஒருவர் அனுமதி!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இலங்கையின் அனுராதபுரம் சிறைச் சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த வெள்ளிக்கிழமை (14-09-2018) முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறையில் உள்ள போதிலும், தமக்கெதிராக எவ்வித வழக்குகளும் தொடுக்கப்படவில்லை எனக் கூறியும், தமக்கெதிரான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தக் கோரியும் அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு, உடல் நலக்குறைவுடன் இருந்த சிறைக் கைதி ஒருவர், கடந்த ஞாயிற்றுக் கிழமை கொழும்பு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது அவர் கொழும்பிலுள்ள சிறைச் சாலைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: