இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைது!

இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைது!

இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைது!

தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்த மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்று (புதன்கிழமை) படகு வழியாக இலங்கை திரும்பிய நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


இலங்கையில் இருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்து படகு மூலம் தமிழகத்திற்குச் சென்று தங்கியிருக்கும் ஈழ அகதிகள் தமிழ்நாடு அகதி முகாமின் நெருக்கடி மற்றும் விமானம் மூலம் தாயகம் திரும்புவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக தமது இலகு பயணத்திற்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு ஓர் படகில் இரு சிறுவர்கள் , ஓர் பெண் உட்பட ஆறுபேர் படகு மூலம் தாயகம் திரும்பிய நிலையில் இலங்கை கடற்பரப்புக்குள் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இவர்களை ஏற்றிவந்த இரு படகோட்டிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஆறுபேர் மட்டுமே தாயகம் திரும்பிய இலங்கை அகதிகள் என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்தவர்களை கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் காங்கேசன்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களை இன்று யாழ் மல்லாகம் நீதிமன்றில் ஆயர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை காங்கேசன்துறை போலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதனிடையே, இம்மாதத்தில் இதுவரை 19 பேர் இவ்வாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு தாயகம் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

அனுமதியின்றி இலங்கை சென்ற அகதிக் குடும்பத்தினர் 11... அனுமதியின்றி இலங்கை சென்ற அகதிக் குடும்பத்தினர் 11 மாத குழந்தையுடன் கைது! தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் தங்கியிருந்து, கள்ளத்தனமாக இலங்கை செ...
127 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது – விசாரண... 127 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது - விசாரணை ஆரம்பம் என இலங்கை அரசாங்கம் அறிவிப்பு! மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளிடம் தொடர்ந்து விசாரண...
தமிழகத்திலிருந்து இலங்கை செல்ல 700 அகதிகள் தயார்!... தமிழகத்திலிருந்து இலங்கை செல்ல 700 அகதிகள் தயார்! ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமில் இருந்து இலங்கைக்கு செல்ல, 700 அகதிகள் தயாராக இருப்பதாக, மத்...
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை சிங்கள எதிர்ப்பால் தாக்க... இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை சிங்கள எதிர்ப்பால் தாக்கப்பட்ட ராஜீவ்காந்தி! இந்தியாவின் முன்னெடுப்பில் உருவாகி, ராஜீவ் காந்தி- ஜெ.ஆர் ஜெயவர்தன ஆகியோரிடைய...
Tags: