தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு துணைவேந்தராக ஷீலா ஸ்டிஃபனை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகம் கடந்த 2005ம் ஆண்டு தமிழக அரசால் சென்னையில் அமைக்கப்பட்டது. இந்த பல்கலைகழகத்துக்கான துணைவேந்தர் பதவி காலியாக இருந்து வந்த நிலையில், துணைவேந்தரை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், `மூன்றாண்டுகள் பதவிக்காலம் கொண்ட தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக ஷீலா ஸ்டிஃபனை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். ஷீலா ஸ்டிஃபன் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 110 எம்.பில் மாணவர்களுக்கும், 10 பி.எச்.டி மாணவர்களுக்கும் வழிகாட்டு ஆசியராக இருந்துள்ளார்’ என அதில் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து ஆளுநர் மாளிகையில் ஷீலா ஸ்டீபனுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.