தமிழ் செம்மொழியாக காரணம் உ.வே.சாமிநாதய்யர்: கவர்னர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்!

தமிழ் செம்மொழியாக காரணம் உ.வே.சாமிநாதய்யர்: கவர்னர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்!

தமிழ் செம்மொழியாக காரணம் உ.வே.சாமிநாதய்யர்: கவர்னர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்!

”தமிழ், செம்மொழி எனும் அந்தஸ்தை பெற காரணமானவர், ‘தமிழ் தாத்தா’ என அழைக்கப்பட்ட, உ.வே.சாமிநாதய்யர்,” என, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கூறியுள்ளார்.

டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நுால் நிலையம்மற்றும் சென்னை பல்கலையின் சார்பில் நேற்று, ஆ.ரா.வேங்கடாஜலபதி பதிப்பித்த, ‘உ.வே.சாமிநாதய்யர் கடிதக் கருவூலம்’ என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னை பல்கலையில் நடந்தது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

மேலும், உ.வே.சா.,நுாலகத்தின், 75ம் ஆண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்பட்டது. நுாலை வெளியிட்டு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது: தமிழ், இனிமையான மொழி; அதனால், நான் அதை பெரிதும் விரும்புகிறேன். ‘தமிழ் தாத்தா’ என, அன்பாக அழைக்கப்பட்ட, உ.வே.சாமிநாதய்யர், தனக்கு வந்த, 13 ஆயிரம் கடிதங்களை சேகரித்து வைத்திருந்தார்.

அவருக்கு, கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி, முக்கிய அரசு பொறுப்பில் இருந்தோர், தமிழ் அறிஞர் என, பலரும் கடிதம் எழுதி இருந்தனர். அவை, அந்த காலகட்டத்தின் சமூக சூழல் உள்ளிட்டவற்றை எடுத்துக் கூறியுள்ளன. அவர், தமிழின் மிகப் பழமையான ஓலைச்சுவடிகள், காகிதச்சுவடிகளை தேடிக் கண்டுபிடித்து பதிப்பித்தார்.

அவர் பதிப்பித்த சீவகசிந்தாமணி, புறநானுாறு, சிலப்பதிகாரம், குறுந்தொகை உள்ளிட்ட பதிப்புகள், தமிழின் பழமையை எடுத்துக் கூறுவனவாக இருந்தன. தமிழை, செம்மொழியாக அறிவிக்க, அதுவே காரணமாகவும் இருந்தன.” இவ்வாறு அவர் பேசினார்.

வி.ஐ.டி., பல்கலையின் துணைவேந்தர், கோ.விசுவநாதன் பேசியதாவது: ஓலைச்சுவடிகளில் முடங்கிக் கிடந்த, சங்க கால தமிழை பதிப்பேற்றி, தமிழுலகத்திற்கு தந்தவர், உ.வே.சாமிநாதய்யர். அவருக்கு வந்த கடிதங்களில் பல சிதைந்தும், சுருக்கெழுத்து குறிப்புகளாகவும் இருந்த போதிலும், பதிப்பாசிரியர் அவற்றை திரட்டி பதிப்பித்துள்ளார்.உலகில் வாழும் செம்மொழியாக, தமிழ் மட்டுமே உள்ளது. எனவே, தமிழக நீதிமன்றங்களில், தமிழில் கையெழுத்திட, கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>