ஏழு பேர் விடுதலை விவகாரம் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஏழு பேர் விடுதலை, விவகாரம்  பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button‘தி.மு.க.,வின், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஏழுபேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்’ என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை: ராஜிவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை, விடுதலை செய்ய பரிந்துரைத்து, அ.தி.மு.க., ஆட்சியில், 2018 செப்., 9ல் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த பிப்., 2ம் தேதி, சட்டசபையில் கவர்னர் உரையாற்ற ஆரம்பிக்கும் போது, ஏழு பேர் விடுதலை குறித்து, எந்த முடிவும் எடுக்காததை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.இந்த சூழ்நிலையில், ஏழு பேரை விடுதலை செய்வதற்கான, தமிழக அரசின் பரிந்துரையை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பினார். ஏழு பேர் விடுதலை குறித்து, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. ஸ்டாலின் முதல்வரான பின், மே 19ம் தேதி, ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், மாநில அரசின் பரிந்துரையை ஏற்று, ஏழு பேரை விடுதலை செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

முதல்வர் கடிதம் எழுதி 124 நாட்களான நிலையில், எந்தவித நடவடிக்கையும் இல்லாதது மன வேதனையை அளித்துள்ளது.இந்நிலையில், ‘இந்த விஷயத்தில், புதிய கவர்னரிடம் அழுத்தம் கொடுக்க முடியாது’ என்று சட்ட அமைச்சர் தெரிவித்திருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது. அமைச்சரின் பேட்டியை பார்க்கும் போது, இதையும், ‘நீட்’ தேர்வு போல, தி.மு.க., அரசு நீர்த்துப் போக செய்து விட்டதா என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது.தி.மு.க., – எம்.பி.,க்கள் வாயிலாக, மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுத்து, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஏழு பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

நன்றி : தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>