சுடுமண் பானை, எழுத்தாணி, தங்க அணிகலன்! – மதுரையில் கீழடி கண்காட்சி திறப்பு!

சுடுமண் பானை, எழுத்தாணி, தங்க அணிகலன்! – மதுரையில் கீழடி கண்காட்சி திறப்பு!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல் துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக ஆயிரக்கணக்கில் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றை பொதுமக்கள் எப்போதும் பார்க்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென்று பல்வேறு தலைவர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், இன்று கீழடி அகழாய்வு தொல்பொருள்கள் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.

மதுரையில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் இக்க‌ண்காட்சி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுடுமண் பானைகள், எழுத்தாணிகள், உலோக ஆயுதம், தங்கத்தில் செய்யப்பட்ட அணிகலன்கள், சுட்ட மண்பானை ஓடுகள், விளையாட்டுப் பொருள்கள், தாயக்கட்டைகள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகள் எனப் பல பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அப்பொருள்கள் பற்றிய விவரங்களும் வாசிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன.

முழுமையான அருங்காட்சியகம் அமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தாமதமாகி வருவதால், பொதுமக்களின் கோரிக்கைக்காகத் தற்காலிகமாக இந்த அருங்காட்சியகம் உலகத் தமிழ்ச் சங்க கட்டடத்தில் அமைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இன்று மதியம் இக்கண்காட்சியகத்தை முதலமைச்சர் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். மக்கள் இதைத் திரளாக வந்து பார்வையிட்டு வருகின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>