சிவகங்கை மாவட்டம், கீழடியில், தமிழக அரசு சார்பில், ஜூன், 13ல், ஐந்தாம் கட்ட அகழாய்வு துவங்கியது, இதில் வட்டப்பானை, பானை ஓடுகள், பானை மூடிகள், உறைகிணறு, இரட்டைச்சுவர், எலும்புகள் ஆகியவை கண்டறியப்பட்டன.
குஜராத், மகாராஷ்டிரா பெண்கள் பயன்படுத்தும், ‘அகெய்ட்’ வகை அணிகலன்கள், எலும்பு சுத்தியல் உள்ளிட்ட, 700 பொருட்கள், இதுவரை கண்டெடுக்கப்பட்டு உள்ளன. பண்டைய காலத்தில், வடமாநிலங்களில் இருந்து பலரும் வியாபாரம் நிமித்தம், தமிழகம் வந்துள்ளனர். பண்ட மாற்ற முறைவழியாக, விற்பனை நடந்துள்ளது. பெண்களின் அழகு சாதன பொருட்கள் வியாபாரத்தில் முக்கிய இடம் வகித்துள்ளது. மேலும், ஒன்றரை மாத காலம் அகழாய்வு நடத்த, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக பொருட்கள் கிடைக்க வாய்ப்புண்டு என, அகழாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.