அமீரகத்தில் கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகர் பார்த்திபன்

யுஏஇ அரசாங்கம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. இது 10 ஆண்டுகளுக்கான விசா. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்த நடிகர் பார்த்திபனுக்கு  ஐக்கிய அரபு அமீரக அரசு இந்த விருதை  வழங்கியுள்ளது. இந்த கோல்டன் விசாவை பெரும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஏற்கனவே பல இந்திய நடிகர் நடிகைகள் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர். தமிழ் நடிகைகளில் முதல்முறையாக கோல்டன் விசா பெற்றவர்களில் என்ற பெருமையைப் பெற்றவர் நடிகை திரிஷா. அதேபோன்று தமிழ் நடிகர்களில் பார்த்திபன் இடம்பெற்றுள்ளார்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>