
சி.பி.எஸ்.இ., பிளஸ் 1 உடற்கல்வி குறித்த பாடப்புத்தகத்தில்,யோகா பாட்டி நாணம்மாள் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் முதுமையான யோகா ஆசிரியரான இவர், கோவையை சேர்ந்தவர் எனவும், 45 ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்களை உருவாக்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரிடம் படித்த, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது யோகா ஆசிரியராக பயிற்சி அளிக்கின்றனர்.

2016ல், மத்திய அரசின் ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருதும், 2018ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். 2019ல் காலமானார்.பாடப்புத்தகத்தில் இடம்பெற்றதால், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், யோகா பாட்டி நாணம்மாள் குறித்து அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்