துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் தௌபீக் என்ற கேரள இளைஞர். இவர் கேரளாவின் கொச்சி பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் குடியிருக்கும் பள்ளி ஒன்றில் தமிழ் எழுத்துக்களினால் ஆன கல்வெட்டு இருந்து வருவதை பார்த்துள்ளார்.
கேரளாவில் தமிழ் எப்படி வந்தது. ஒருவேளை இந்த பகுதியில் வந்து குடியேறியவர்கள் தமிழகத்தில் இருந்து வந்தவர்களா? என்பது போன்ற ஐயங்களை இவருக்கு எழுப்பியுள்ளது.இதன் காரணமாக ஆய்வினை மேற்கொள்ள தொடங்கிய அவருக்கு ஒரு சிலர் ஒத்துழைப்பு அளிக்க மறுத்துள்ளனர்.
எனினும் இடைவிடாத முயற்சியின் காரணமாகவும், இணையத்தளம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் தமிழ் மொழியினை கற்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
காயல்பட்டணம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த பகுதியுடன் தொடர்பு கட்டாயம் இருக்க வேண்டும் என நம்புகிறார். அடுத்த மாதம் தனது திருமணத்துக்காக செல்ல இருக்கும் இந்த இளைஞர் இந்த ஆய்வுப் பணியினையும் மேற்கொள்ள இருக்கிறார்.