கர்நாடகத் தமிழர்களின் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும்: ஆய்வறிக்கைகள் வரவேற்பு!

கர்நாடகத் தமிழர்களின் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும்: ஆய்வறிக்கைகள் வரவேற்பு!

கர்நாடகத் தமிழர்களின் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும்: ஆய்வறிக்கைகள் வரவேற்பு!

கர்நாடகத் தமிழர்களின் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் ஆய்வறிக்கைகள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், செயலாளர் ராமசுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


கர்நாடகத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்துடன் இணைந்து பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெகு விரைவில் கர்நாடகத் தமிழர்களின் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பிலான கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தின் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் மொழிச் சிறுபான்மையினரான தமிழர்கள் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், அரசியல் போன்ற வகைகளின் அடிப்படையில் ஏராளமான சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். தமிழர்களின் தாயகமாம் தமிழகத்தை ஆளும் மாநில அரசின் உதவியையும் ஆதரவையும் எதிர்பார்த்து தோல்வியுற்றதாக கருதுகிறோம்.

வாழ் நிலமாம் கர்நாடகத்தை ஆட்சிபுரியும் மாநில அரசு மொழிச் சிறுபான்மையினராம் கர்நாடகத் தமிழர்களை முதல் தர குடிமக்களாக நடத்தத் தவறவிட்டது. தாய்மொழிக் கல்வி, தரமான கல்வி, நிலையான வேலை வாய்ப்பு, முறையான தொழில் வாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தமிழர்களுக்கு வழங்குவதில் கர்நாடக அரசு தனது கடமையை முழுமையாக ஆற்றியதாக கூறமுடியவில்லை.

அரசியல் களத்தில் தமிழர்களுக்கு பங்காற்ற கிடைத்த நல்ல பல வாய்ப்புகளை கர்நாடகத் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சரியாக பயன்படுத்தவில்லை என்று எண்ண தோன்றுகிறது. இந்திய நாடு விடுதலை அடைந்த பிறகு, 1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கர்நாடகத்தில் சேர்க்கப்பட்ட தமிழர் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் மொழிச் சிறுபான்மையினராக ஆகிவிட்டதை அறிவோம்.

அரசியலமைப்புச் சட்டத்தில் மொழிச் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்ட சட்டப்பூர்வ உரிமைகளை முழுமையாக அனுபவிக்க இயலாத நிலையில் கர்நாடகத் தமிழர்கள் தவித்து வருகிறார்கள். கர்நாடகத் தமிழர்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்களை தீர்த்துவைக்க கர்நாடக மற்றும் தமிழக அரசுகள் தவறிவிட்டுள்ள நிலையில், கர்நாடகத் தமிழர்கள் தாமே முன்வந்து தமது சிக்கல்களை தீர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கர்நாடகத் தமிழர்களின் சிக்கல்களை தீர்ப்பதில் ஆர்வம் காட்டிவரும் தமிழர்கள் பல்வேறு வேறுபாடுகளை கடந்து ஒற்றைப்புள்ளியில் இணைய வேண்டிய அவசியம் உருவாகியுள்ளதை உணர வேண்டியுள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே கலந்தாய்வுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத் தமிழர்களின் அரசியல், தொழில்-வேலை, கல்வி-தாய்மொழி சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ற தனித்தனி தலைப்புகளில் தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்ட அனைவரிடம் இருந்தும் ஆய்வறிக்கைகளை வரவேற்கிறோம்.

உணர்வுரீதியாக அல்லாமல் அறிவியல் ரீதியில் சிக்கல்களை அலசி, அதற்கான தீர்வுகளை 500 வரிகளுக்கு மிகாமல் பிப்.20-ஆம் தேதிக்குள் தலைவர், பெங்களூரு தமிழ்ச்சங்கம், 56, அண்ணாசாமி முதலியார் தெரு, அல்சூர், பெங்களூரு-560008 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்பலாம் அல்லது நேரில் கையளிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. விவரங்களுக்கு 9449485903,9886713738. என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>