கூகுள் நிறுவனம் குரல்வழித் தமிழ் உள்ளீடு சேவை தொடங்கியுள்ளது!

கூகுள் நிறுவனம் குரல்வழித் தமிழ் உள்ளீடு சேவை தொடங்கியுள்ளது!

கூகுள் நிறுவனம் குரல்வழித் தமிழ் உள்ளீடு சேவை தொடங்கியுள்ளது!

இதற்காகத்தான் இத்தனை நாட்களாய் காத்திருந்தோம். கூகுளின் குரல்வழித் தமிழ் உள்ளீடு சேவை தொடங்கியுள்ளது.

ஏற்கனவே ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் குரல்வழி உள்ளீடும் வசதியை அளித்து வந்த கூகுள் நிறுவனம் தற்போது தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளுக்கும் இச்சேவையை விரிவுபடுத்தியுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தமிழில் தட்டச்சு செய்ய தயங்கியவர்கள், இனி பேசியே தங்கள் எண்ணங்களை எழுத்துகளாக்கலாம். இதற்கு கூகுள் நிறுவனத்தின் Gboard என்ற செயலியை தரவிறக்கம் ( டவுன்லோடு) செய்து கொள்ள வேண்டும். விசை பலகையில் இருக்கும் ஒலி வாங்கி (மைக்) போன்ற குறியீட்டினை அழுத்தினால் கூகுளின் Voice To Text வசதி வரும். அதனை சொடுக்கிய பிறகு, இடப்புறமாக Settings Symbol ஐ காணலாம்.

அங்கு ஏற்கனவே நமக்கு Default language ஆக ஆங்கிலம் இருக்கும். இப்போது அதற்கு பதிலாக தமிழ் மொழியினை தேர்வு செய்தால் போதும். அதன் பின் நேரடியாக ஒலி வாங்கி குறியீட்டினை அழுத்தி தமிழில் பேசினால், தானாகவே தமிழில் எழுத்துக்களாவதை காணலாம்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: